பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 - டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா என்பது வீடு, மனை, தோட்டம், துற்புெ, பணம், பயன்படும் உடமைப் பொருட்கள் முதலியன. . . கல்விப்பொருள் என்பது உண்மை குணம், தலைமை என்பனவாகும். - பொருள் என்பதற்குப் பொன் என்றும் பொருள். பொன் என்றால் உடல் என்றும் பொருள் உண்டு. . " இப் போது நாம் பொருள் என்ற சொல்லுக்குரிய பொருளைக் காண்போம். " . பொருள் என்றால் கருத்து. பொருள் என்றால் உண்மை. பொருள் என்றால் உடம்பு. இக் குறளுக்குப் பொருள் கூறியவர்கள் எல்லோரும் உண்மையான பொருளைக் காண்பது அறிவு என்றே சொல்லிச் சென்றனர். - இந்த உலகில் உணர்மையான பொருள் அதாவது மெய்ப்பொருள் என்ன என்று யாரும் கூறவில்லை. பிறர் வாயிலாகக் கேட்பனவற்றில் எது உண்மையான பொருள் என்று ஆராய்ந்து தெளிவதுதான் அறிவு என்றனர். - - ஆக, மெய்ப்பொருள் என்கிற உண்மையான பொருள் இந்த உலகில் எது? - - - கல்விப் பொருள், செல்வப் பொருள் என்பது போல, மெய்ப்பொருள் ஒன்று இருக்கிறதல்லவா? - அந்த மெய்ப்பொருள்தான் நமது உடல் ஆகும். நமது உடலை பொய் என்பார்கள். மாயை என்பார்கள். அழிந்து போவது என்பார்கள். - என்றாலும் பொய்யில்லாத உண்மை. மாயையில்லாத நிஜம், அழிந்தாலும் உலகில் என்றும் புகழாய் நிலைத்திருப்பது மனித உடலினால் ஏற்படும் மகிமைதானே.