பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 10. அடக்கமும் அடங்காமையும் ೨-ಕಹಿಹಿ அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். - (121) - இங்கே இடம் பெற்றிருக்கிற குறள் அடக்கம் உடைமை என்னும் 13வது அதிகாரத்தில் வந்திருக்கும் வரம்பெற்ற குறள். இந்தக் குறளுக்கு ஆன்றோர் பலரில் ஒருசிலர் எழுதிய உரையினை முதலில் பார்ப்போம். " . ஒருவனை அடக்கமாகிய அறம், பின் தேவருலகத்து உய்க்கும். அடங்காமையாகிய பாவம் தங்குதற்கரிய இருளின்கண் செலுத்தும். (பரிமேலழகர்) - அடக்கமாகிய அறம் ஒருவனை அமரர்கள் உலகில் செலுத்துவதாகும். அடக்கமில்லாத தீய குணம் பெறுதற்கரிய இருளான துன்ப உலகில் கொண்டு தள்ளி விடும். (திருக்குறள் வி. முனுசாமி) - - . . . . அடக்கமானது ஒருவன் விரும்புகின்ற அருளை அவனுக்குக் கொடுக்க வல்லது. அடக்கமின்மையாவது நிறைந்த துன்பத்தைக் கொடுத்துவிடும். (நாவலர் நெடுஞ்செழியன்) - - . . . அடக்கம் என்னும் உயர்தன்மை ஒருவரை அழியாப் புகழ் நிலையுள் சேர்க்கும். அடங்காமை என்னும் இழிதன்மை நீங்காப்பழி என்னும் இருளிடத்தில் தள்ளிவிடும். - (மதுரை இளங்குமரனார்) ... ' - - - இந்தக் குறளுக்குரிய பொருளை அவரவர் மனநிலைக்கேற்ப விளக்கியுள்ளார்கள். உங்கள் மனத்தில என்ன நினைவோட்டம் எழுகிறது என்று ஒடவிடுங்கள். . அதன் பிறகு மீண்டும் தொடருங்கள். இந்தக் குறளில் உள்ள ஏழு சொற்கள் எவ்வளவு ஆழமான அர்த்தங்களை அடக்கிக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்கின்றன. _