பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 - டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா மண்கலம் என்ற சொல்தான் மங்கலம் என்று மாற்றி எழுதப்பட்டிருக்கிறதோ என்றுகூட எண்ண இடமுண்டு. என்றாலும், மங்கலம் என்ற சொல்லுக்கு நீர்க்குடம் என்ற ஒர் அர்த்தம் இருப்பதை இங்கே நாம் நினைவு கூர்வோம். அந்தக் காலத்தில் வீட்டில் சமையலுக்குப் புழங்கப்பட்ட பாத்திரங்கள் மண்கலங்கள்தாம் என்பது கால வரலாறு கூறும் கலப்படமற்ற உண்மையாகும். - என்ப என்றால் என்பர், என்று சொல்வர் என்று அர்த்தம். முதலில் மங்கலம் என்ற நீர்க்குடம் பற்றிப் பார்ப்போம். நீர்க்குடம் என்கிற பண்புகளின் நிறைகுடமாக இருப்பது குடும்ப வாழ்க்கை. மனை மாட்சி என்கிற நற்குண நற்செய்கைகள் நிறைந்ததாக விளங்குதிறது. அதாவது இல்வாழ்க்கையின் இலட்சணமாக இலங்குகிறது. மனை என்றால் மனைவி என்பர். இங்கே கணவன் மனைவி இரண்டுபேரும் கலந்து, இணையாக வாழ்கிற வீடு என்று நாம் பொருள் கூறுகிறோம். கணவனும் மனைவியும் அதாவது தலைவியும் தலைவனும் சேர்ந்து வீட்டிற்கு சேர்க்கிற அழகு, பெருமை, அமைதி, செழுமை, நிறை மாண்பு எல்லாவற்றிற்க்கும் மொத்தமான ஒரு பெயர்தான் மாட்சி என்பதாகும். முகத்திற்கு இரு கண்கள் மாட்சிபோல வீட்டிற்கு கணவன் மனைவி இருவரும் மாட்சியாகின்றனர். - - இப்படிப்பட்ட மாட்சிமையான நிறைகுடமான நீர்க்குடத்தை மிகவும் எச்சரிக்கையாக கையாள வேண்டும் . பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். இல்லையேல் என்ன ஆகும்? - - - , குடம் உடைந்து நீர் ஒடும். நல்ல குலப்பெயர் குடும்பப் பெயர் நாசமாகும். நீரால் தூய்மை. நீரால் பெறும் பல பயன்கள் எல்லாம் நிலைகுலைந்து போகும் என்பது பொதுவிதிதானே! குடும்ப கெளரவமும் குடத்திற்கு ஒப்பானதுதானே!