பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 - டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா பாண்டங்களைச் செய்கின்ற நேரத்தில் அந்தச் சமயத்தில் உண்டாகும் மனநிலை எப்படி அமைகிறதோ அப்படித்தான் அமையும், மகிழச்சியாக இருந்தால் சிறப்பாகவும், துக்கமாக இருந்தால் ஒரு மாதிரியும் கோபத்தில் வெறுப்பில் எரிச்சலில் அமைகிற பாத்திரங்கள் கோணல்மாணல்களாகவும் கூட உருவாகும். இதுதான் பாத்திரம் வனைபவரின் பதில். அதே நிலைதான் குடும்பத்தில் ஈடுபட்டிருக்கிற கணவன் - மனைவிக்கும் உள்ள சூழ்நிலை. - - மாட்சியுடன் விளங்குகிற தாய்தந்தைக்குப் பிறக்கும் குழந்தைகள் நன்கலம் அமைவதுபோல, நன்மைகளாகப் பிறக்கும் பேறு பெறுகின்றனர். - - ஒழுக்கமற்ற தாய் தந்தையாக்குப் பிறக்கும் குழந்தைகள் ஊனமுற்றவர்களாகப் பிறப்பர்கள் என்கிற உணமையை இன்றைய உளநூல் அறிஞர்கள் உரைக்கிறார்கள். முந்தைய மகாபாரதமும் அப்படித்தான் போதிக்கிறது. மாமியாரின் வேண்டுகோளுக்கி ணங்கிக் குழந்தை வரம்தர வந்த முனிவரிடம் வெறுப்படைந்து கண்களை மூடிக்கொண்டு உறவு கொண்ட பெண் குருட்டுக் குழந்தையைப் பெற்றாள். அச்சப்பட்டு நாணி, மெலிந்த மனத்துடன்சோகைப்பட்டு உறவு கொண்டவள் பாண்டாக ஒரு குழந்தையைப் பெற்றாள். மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டவள் வீரனைப் பெற்றாள் என்பது கதை. உடலுறவின் போது கால்களை இடக்கு மடக்காக வைத்திருக்கும் தம்பதியர்க்கு ஊனமுற்ற குழந்தைகள் உருவாகின்றன என்பதெல்லாம் ஒழுக்கத்தின் இழுக்கம் பற்றிய நிகழ்ச்சிகளாகும். - நன்மக்கள் என்கிற நன்கலத்தை உருவாக்குகிறவர்களான தாய்தந்தையர் மனையில் மாட்சிகாக்க வேண்டும். அந்த மாட்சியை பொறுப்புணர்வுடன் புழங்கிக் கொள்ள வேண்டும்.