பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 டாக்டர் எஸ் , நவராஜ் செல்லையா இங்கே நாம் கொள்வது இந்த மூவகையினரிடத்தும், வழுவாது நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுவதை விட அவர்கள் மனத்திலே தங்களது உயர்ந்த செயல்களால் நட்டு விடுவது. அதாவது குடியேறிவிடுவது. நடுதல் என்றால் ஊன்றுதல் பயிரிடுதல் என்பது போல, தனது பண்பாற்றலால் நெஞ்சில் அமர்ந்து கொள்ளுதல் ஆகிறது என்றால், இன்னும் கொஞ்சம் ஆழமாகச்சிந்திக்கிறோம் என்று அமைகிறதல்லவா? அப்படிப்பட்ட அன்பான எண்ணம் ஏற்படுகிறபோதே, ஒருவரின் வாழ்வு முறையில் ஒப்பற்ற அறமும் திறமும் ஒன்றித்து விடுகின்றன. - தக்கார் என்ற சொல்லுக்கு அறிஞர், மேன்மக்கள், பெருமையிற் சிறந்தார் என்று பல அர்த்தங்கள் உண்டு. தகவு என்றால் அறிவு, ஒழுக்கம், தகுதி, நன்மை, நீதி, பெருமை வலிமை, நல்லொழுக்கம், கற்புநிலை, நடுவுநிலை என்னும் பல அர்த்தங்கள் உண்டு. - - - ஒருவர் அறிஞர்தான், மேன்மக்களில் ஒருவர்தான், பெருமையிற் சிறந்தவர்தான் என்று எப்போது அறிய முடியும்? அதைத்தான் வள்ளுவர் கூறுகிறார். அவரவர் எச்சத்தால் காணப்படும் என்று. - - எச்சம் என்றால், எஞ்சி நிற்பது, அவரது மக்கள் என்றுதான் பொருள் கொண்டிருக்கின்றனர். எச்சம் என்பதற்கு உண்மை, குறை, காரியம், சந்ததி, ஈவு என்னும் பல அர்த்தங்கள் உண்டு. - - ஒருவர்தக்கவர், தகவுள்ளவர், தகவிலார் என்று எப்போது கூறமுடியும்? - - - - அவரவரது நன்மக்களது உண்மையானும் இன்மையானும் என்றால, குழந்தைகளைக் கொண்டு பெற்றோர்களைப் போற்ற முடியுமா? - - உதாரணத்திற்கு ஒன்று மகாத்மா என்று - போற்றப்பட்டவரின் மக்கள் அவரைப் போல் வாழ வில்லையே! - - . .