பக்கம்:குறளோவியம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனவினால் காணார்! 64 முல்லை மலர்க் காட்டில் மெல்லியலாள் மெய் தழுவிக்கிடந்த காதலன் பிரிகிறான். வாலிபத்தின் விருந்தை இடையறாது சுவைக்கும் வாய்ப்பை இருவருமே இழந்து தவிக்கின்றனர். வாணிபம் குறுக்கிடுகிறது. ஆகவே பிரிகிறார்கள். தலைவனை அணைத்திருக்கும் போது அவன் சிறிது நகர்ந்தாலே மேனி யெங்கும் பசலை நிறம் படர்ந்து என்னை வாட்டுமே; அப்படிப்பட்ட என்னைவிட்டு அவர் இத்தனை நாள் பிரிந்து செல்வது நியாயமா?" என்ற கேள்விக் கணைகளைத் தொடுக்கிறாள் கண்ணாடிக்கு முன்னே நின்றுகொண்டு ! அந்தப் பளிங் கிலே தோன்றும் உருவம் அவளை மேலும் அழவைக் கிறது. ஏனெனில் பசலை படிந்த அவளது உருவமே அது ! அதைக் காணுகிறாள். கண்ணீர் முத்துக்கள் உருள்கின்றன. இதழிடை முத்துக்கள் எங்கேயோ ஒளிந்து கொள்கின்றன. பிரிவின் சோகத்தால் காதலன் மீது ஏற்பட்ட கோபத்தோடு படுக்கையிலே படுக்கிறாள். இல்லை; விழுகிறாள். உடலைப் 'பொத்'தென்று போடு கிறாள். தூக்கம் அவளைத் தொட முடியாமல் தவிக்கிறது. இறுதியில் வெல்கிறது. தூங்குகிறாள். காதலன் வருகிறான். அவனது கற்பகம் சேர்ந்த மார்பில் அற்புத அழகு முகத்தை ஒட்டுகிறாள். உச்சி முதல் உள்ளங்கால் வரை முத்த மழையால் நனைகிறது!| நேரம் போவதே தெரியவில்லை. தொடர்ச்சி கெடாமல் இன்பம்! கேளிக்கை ! கீதம் திடீரென்று விழிக்கிறாள்: அவளோடு சேர்ந்து கதிரவனும் விழிக்கிறான்; எல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறளோவியம்.pdf/25&oldid=1688599" இலிருந்து மீள்விக்கப்பட்டது