இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
எங்கள் எண்ணம். திருக்குறள்: தமிழர்தம் தலையாய பெரு நூல் ! அதன் ஒன்றேமுக்கால் வரிப் பாடல்கள் ஒவ்வொன்றும் அரிய பெரிய சிறந்த பரந்த சிந்தனையைத் தூண்டும் எழிலோவியங்கள் ! வள்ளுவரின் அருமைமிகு சொற்கள், ஆழ்ந்த பொருள்கள் ஆகியவற்றைக் கலைஞர் மு. கருணா நிதி அவர்கள் தமது அழகு தமிழில் எளிய நடையில் எல்லார் உள்ளத்தையும் ஈர்க்கும் நெறியில் வருணனை எழுத்தால் வண்ண ஓவியமாக அவ்வப்போது தீட்டி வந்த தன் தொகுப்பே இக் குறளோவியம்! கலைஞர் கண்கொண்டு குறளைக் காண்பது தமிழைத் துய்ப்பார்க்கே இணையிலா இன்பமும், பெரும் பயனும் நல்கும். ஆதலால் இதனை நூல் வடிவில் தமிழ்ப் பெருமக்கள் முன் படைக்கிறோம்.