பக்கம்:குறளோவியம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளோவியம் 87 அந்தக் கனி-முக்கனியினும் சுவையானது! முத்தக் கனிக்கு மூத்த முழுமுதல் கனி அது! சித்தங் களிப் பேற்றும் சிற்றின்பக் கனிக்கு அடிப்படை அமைக்கும் அன்புக் கனியாகும் அது! இந்தக் கனியின் பெயர்தான் "ஊடல் கனி"- இன்ப போதையூட்டும் இந்தக் கனியை உண்ட பிறகே இளங் காதலர்க்கு ஆனந்த மயக்கம் ஏற்படுகிறதாம். 'இதை உண்ணாது தேடும் இன்பம், உருசி உடையதே எனினும் 'முழுமை' அடைந்ததல்ல என்பது வள்ளுவர் கண்ட உண்மை-வாழ்வில் துணைபெற்றோர் வழங்கும் அனுபவ ஏடு ! கட்டிலறையிலே-கணவனும் மனைவியும் செல்ல மாக சண்டை போட்டுக்கொள்ளுங்கள் - ஏன் சண்டை போட்டுக்கொள்ள வேண்டும் தெரியுமா?-ஒன்று சேறு வதற்காக! ஊடல் புரிக! ஏன் ? கூடுவதற்காக!-கிண் டல் நிறைந்த அழகான உண்மையல்லவா இது! செல்லச் சண்டை பிறகு இருவரும் தனித்தனியே!- ஓரிரு நாழி கைகள் நகருகின் றன அதுவரைகூட பொறுக்காது அதற் குள்ளாகவே மங்கிய ஒளியில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தல் - இருவரும் ஏககாலத்தில் பார்த்துக்கொண்டு ஒருவருக்கொருவர் நாணுதல்--நெருங்குதல்-கரம் படு தல் - 'சூ என்னைத் தொடவேண்டாம்' என்ற கடுமொழி ஆனால் கரும்பை வெல்லும் மொழி! அவன் கையை எடுத்துக் கொள்ளல்-பிறகு அவள் அவன்மீது கை படுமாறு நெருங்கல்—‘அட நீ ஏன் என்னைத் தொடுகி றாய்? அவன் சீறுதல் செல்லமா க! @13 ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறளோவியம்.pdf/37&oldid=1703085" இலிருந்து மீள்விக்கப்பட்டது