பக்கம்:குறளோவியம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 குறளோவியம் எதிர்க்கிறது. வீரனும், யானையை வெல்லத் தீரமாகப் போரிடுகிறான். தமிழனல்லவா? முதுகு காட்டாத மரபு அல்லவா P - நிமிர்ந்த நெஞ்சோடும், தூக்கிய வேலோடும் அவன் யானைமீது பாயும்போது. யானையும் தந்திரமாக தன் தந்தங்களை நீட்டி, அந்த வீரனின் வயிற்றைக் குத்தி அவனை மேலே தூக்கி விடுகிறது. மரண முகப்பிலே அந்த வேலேந்தி வேதனைக் குரல் எழுப்புகிறான். அதுவும் வீரத்தோடு கறந்து வரும் குரல்தான். வீரனைக் குத்திய வேகத்திலே, அந்த வேழம் வெற்றி நடை போட்டு, ஆவேசமாகவும் ஆத்திரமாகவும் - அங்கு மிங்கும் ஓடுகிறது. அப்படி ஓடும்போது, ஒரு பாறைக்குப் பக்கத்திலே தேங்கி நிற்கும் சேறு நிரம்பிய குட்டையிலே 'காலை வைத்து விடுகிறது. காலை எடுக்க முடியவில்லை. கனமான மிருகம் யானை. அதன் கனம் பூமியை நோக்கி இறங்குகிறதே தவிர மேலெழுந்து கரையேற யானைக்கு உதவி செய்யும் அளவினதாய் இல்லை, யானை தவிக்கிறது அப்போது ஒரு வேடிக்கை நடக்கிறது-என்ன அந்த வேடிக்கை ? ஒருநரி, யானையின் நிலைமையைப் பார்த்து விடுகிறது. இதுதான் சமயமென்று, அந்த நரி,யானையின் மீது பாய்ந்து தன் ஆகாரத்திற்கு வழி தேடுகிறது. யானையின் உடலெங்கும் நரி, தன் பற்களாலும் நகங்க ளாலும் பிராண்டி, ரத்தம் குடிக்கிறது. மாமிசமும் தின்கிறது. யானையோ, எதிர்த்திடமுடியாமல் ஏங்கு கிறது - வேதனை தாங்காமல் துடிக்கிறது. சேற்றிலே மட்டும் அது அகப்படவில்லையானால் அந்த நரி, ஒரே மிதியில் கூழாகிவிடும். இப்போதோ, நரிக்கு ஒரே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறளோவியம்.pdf/54&oldid=1703104" இலிருந்து மீள்விக்கப்பட்டது