பக்கம்:குறளோவியம்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 குறளோவியம் "கொல்லும்படை, அழல் போலும் மாலைக்குத் தூதாகி" என்கிறார். அதுமட்டுமா? மாலை நேரத்திலே ஆயன் குழலூதிக் கொண்டிருக் கிறான். குழலிலேயிருந்து இனிமை அருவியெனக் கொட்டுகிறது. தென்றலுக்கே இன்பம் சேர்க்கிறது அந்த இசை. அசைந்தாடும் மலர்க்கொத்துகள் குழ லிசைக்கு அபிநயம் காட்டுவதுபோல் காட்சி தருகின் றன. நாகத்தையும் மயங்க வைக்கும் என்பர் குழ லோசை. அதுவும் ஆயர் பாடி இளைஞன் அந்த வாத்தி யத்திலே திறமைசாலி. அந்தக் குழலோசையைப் பற்றி "காதலனைக்காணா கட்டழகி என்ன கூறுகிறாள் தெரி யுமா? "என்னை வருத்தும் சேனை ; மாலைக்குத் தூதாக மட்டுமல்ல-ஆயன் குழலாகவும் வருகிறது போலும்! " என்று புலம்புகிறாள். C

  • அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்

குழல்போலும் கொல்லும் படை' " ..

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறளோவியம்.pdf/6&oldid=1688598" இலிருந்து மீள்விக்கப்பட்டது