பக்கம்:குறள்நெறி இசையமுது 1.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை.

இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழ்க் கலைகளின் வலிவும்,வனப்பும்,தமிழகம் நன்கு அறிந்துள்ளது . எனவேதான் சங்க காலத்துக்கு முன்பிருந்தே அவற்றினை நன்கு போற்றிப் புரந்து வந்துள்ளது. இது தமிழ் வரலாறு காட்டும் உண்மை.

"புதியன புகுதலும் பழையன கழிதலும் வழுவல” என்ற முறையில், முத்தமிழ்க் கலைகளிலே புதிய கருத்துக்களை.புரட்சி எண்ணங்களை வளரவிட்ட தமிழ்ப் பேரறிஞர்கள் பலருண்டு. அவர்களிலே பகுத்தறிவும், சமநெறியும் பாங்குற விளைத்தவர் கள், பாவேந்தர் பாரதிதாசன் அவர்களும், கலைவேந்தர் அண்ணு அவர்களும் ஆவார்கள். அவர்களின் சீரிய வழியில் என்சிந்தனை சென்றதால் விளைந்தவையே இந்தக்"குறள்நெறி இசையமுது’’ப் பாடல்கள்.

திருக்குறள் தமிழனுக்குரிய வாழ்வு நெறி வகுத்தளிக்கும் சட்ட நூல். ஞானத்தமிழ்ச் சுரங்கம். தன்மான ஒளிவிளக்கு. அதே வேளையில் இனச்சார்பு, மொழிச்சார்பு, சமயச்சார்பு கடந்து, அனைவர்க்கும் பயனளிக்கும் உலகப் பேரறப் பொது நூல்: பழமைக்குப் பழமையானது: புதுமைக்குப் புதுமை யானது காலத்தால் அழியாத கருத்துக் கருவூலம்,

இத்தகு உயர் தனிக் குறள்நெறி இசைக் கலையில் இடம் பெற வேண்டுமென்று இருபதாண்டுகளுக்கு முன்னரே விரும் பினேன். திரு. பாவலர். தொ. ப. வேலாயுதசாமி அவர்களைக் கொண்டு அறத்துப்பால் பாடல்கள் புனையச்செய்து 1 - 9 - 49ல் புத்தகமாக வெளியிட்டேன், இசைப் புலவர்களுக்கெல்லாம் அனுப்பி வைத்தேன்; எண்ணம் ஈடேறவில்லை;

இப்பொழுது காலம் கனிந்திருக்கிறது. தமிழகத்திலே தனித் தமிழக அரசு மலர்ந்திருக்கிறது. என்னுள் புதியஆக்கம் எழுந்தது. திருக்குறள் அதிகாரம் 133 க்கும் இராக தாள மெட்டமைப்புக்களோடு 133 இசைப் பாடல்கள் புனைந்தேன்.