பக்கம்:குறள்நெறி இசையமுது 2.pdf/24

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

குறள் நெறி


8, வெஃகாமை.

அறத்துப்பால்
அதிகாரம்- 18
இராகம்-கமாஸ்
தாளம். அடை

கண்ணிகள்

1. நடுவின்றிப் பிறர்பொருள் கவராதே.நல்ல
குடிபொன்றிப் பழிமிஞ்சித் திரியாதே
படுபயன் பெரிதென்றே கருதாதே-அதன் கெடுதலை ஒருபோதும் மறவாதே.


2. சிற்றின்பம் சிறுவுணர்வின் விளைவாமே..அதனை
மற்றின்பம் விழைகுவோர் விரும்பாரே. பெற்றிடுவம் செல்வமென முனையாதே.அந்த வெற்றியிலே திருமகளும் இணையாளே.

3. இலமென்றே கவர்ந்திடல் இழிவாகும்-இது
புலன்வென்ற தூயவர்கள் வழியாகும் பலனேதும் குற்றமதில் குறையாகும்.கன்ம மலமாசும் தொலையாமல் துணையாகும்.

4. வசைதன்னை நினையாமல் துணியாதே.நல்ல
வாழ்வுநலம் பாழ்படுமே திருடாதே
இசைபெறும் கண்ணன்குறள் நெறியாலே வரும்
இன்பநிலை தானடைதல் முறையாமே.


22