பக்கம்:குறள்நெறி இசையமுது 2.pdf/25

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

இசையமுது


9. புறங்கூறாமை.


அறத்துப்பால். அதிகாரம்-19

இராகம்-சகானா. தாளம்-ரூபகம்,

எடுப்பு,

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தல் அழகல்லவே அறங்கூறும் நெறியினை மறந்து-இகழ்ந்து (புற)

தொடுப்பு.

பிறன்பழி கூறுவோரின் பெரும் பழியைப் பிறரும் திறனறிந்தே உரைப்பார் முகனமர்ந்தே நகைப்பார் (புற)

படுப்பு.

ஏதிலார்குற்றம்போல் தம்குற்றம்காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கெல்லாம்.

முடிப்பு.

ஓதியுணர்ந்தவற்றில் உரையாடி மகிழாமல் ஒன்றிய நட்பினையே கொன்றேபிரிப்பதான (பிற)

சந்தம்.

கண்னெதிர் நின்று கடியபேசினும்

பின்னிடம் சென்று பழிக்காதே


23