பக்கம்:குறள்நெறி இசையமுது 2.pdf/27

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

இசையமுது



10. கொடுங்கோன்மை,


பொருட்பால், அதிகாரம்-56.

இராகம்-தோடி, தாளம்.ரூபகம்:

       எடுப்பு

கொலையால் வாழ்வானிலும் கொடியன் கொடுங்கோலரசது புரிந்திடுபவன்

                       (கொ)

தொடுப்பு.

தலையான அறங்கள் தடுமாறிப்போக நிலையான முறையின்றி குடிகளை வதைப்போன் குலையாத மாமலை போன்றவனாயினும்

கோலதுவும் மிகுபொருளும் காலமதில் இழந்திடுவான்.

               (கொ}
       படுப்பு.

அல்லற்பட்டாற்றா தழுத கண்ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படையாம்.

முடிப்பு.

நல்லறநீதிகள் கல்லாதான் ஆட்சியில்

நில்லாதுநன்மையும் பெய்யாது வானமும் பொல்லாதகேடுகள் பொங்கிவருகுமே

25


25