பக்கம்:குறள்நெறி இசையமுது 2.pdf/29

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

இசையமுது



                   11. வெருவந்த செய்யாமை,
        பொருட்பால்,                            அதிகாரம்-57
        இராகம்-சிந்துபைரவி.                   தாளம்-ஆதி,
                   கண்ணிகள்,

1. வெருவந்த செய்தொழுகும் வெங்கோலனாயின்

  விரைவினில் அழிகுவான் ஒரு தலேயே 
  செருவங்த போதினில் காவாத காவலன் 
  சிறுமையுள் புகழது பெருகிடுமோ.

2. கடுமொழியும் தண்டமும் கரை கடந்தாலே

  அடுமுரண் தேய்த்திடும் அரமதுவே 
  கொடுங்கோல்மன்னவன் எனும்பெயர்பெறுவது 
  கெடுவதைவிரைவினில் கொணர்வதுவே.

3. கல்லாரையேதனது துணையாய்க்கொண்டவன்

  கடுஞ்செயல்புரிகுவான் கெடுங்காலம் 
  நில்லாது அமைதியும் நிலத்தாய் பொறுமையும் 
  வெல்லாது பகையினை ஒருக்காலும்,

4. தக்காங்கு நாடித்தீய குற்றங்களுணர்ந்தே

  தகிப்பதுபோல்சீறிக் குளிர்ந்திடுக 
  ஒத்தாங்குஒறுத்தல் வேங்தனுக்கழகாகும் 
  ஒருமனதாய்முறை தெளிந்திடுக.

2?


27