பக்கம்:குறள்நெறி இசையமுது 2.pdf/31

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

இசையமுது



                                 18. ஒற்றாடல்.
         பொருட்பால்.                    அதிகாரம்-59 
   இராகம் - செஞ்சருட்டி               தாளம்-ஆதி
                                 எடுப்பு.
       ஒற்றாடுக மன்னா! உற்றநிலைதன்னை  
             திட்டமாய் உணருகவே-வெற்றிபெறவே (ஒற்)
                                 தொடுப்பு. 
             கற்றாரின் நன்னூலும் ஒற்றாடும் சிலபேரும் 
             கண்ணெனப்பெற்றவனே நன்மைதனைப் - 
                                              பெறுவான் (ஒற்)
                                 படுப்பு. 
             எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் 
             வல்லறிதல் வேந்தன் தொழிலாகும்.
                                 முடிப்பு. 
             நல்லாறு கண்டறிந்த நுண்ணறிவால்தெளிந்த 
          நாவடக்கம் துணிவும் காவலுக்குரியரால்       (ஒற்) 
                                 சந்தம் 
             வினைசெய்பவரொடு உறவினர்.பகைவர்
                அனைவரையும் 

ஆய்ந்து அறிந்திடுக

             துணைதரும்செய்தியை வினவிமற்றவனின் 
     புனை பொருளுண்மையை தெளிந்திடுக 
            ஒற்றாடும் சிறப்பினை மறைபொருளாய் 
                வைத்தாளும் பொறுப்பினை நிறைவுடனே - 
                                                      பெறுக (ஒற்)


29


29