பக்கம்:குறள்நெறி இசையமுது 2.pdf/34

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

குறள் நெறி


குறள்நெறி

                                15. மடி இன்மை,
          பொருட்பால்.                            அதிகாரம்-61 
          இராகம்-குந்தளவராளி.                  தாளம்-ஆதி
  
                                எடுப்பு.
          மடிமை நீ கொள்ளாதே-மனமே 
          மாசுபடிந்து தீய நெறிபயக்கும்-மயக்கும்      (மடி) 
                         
                               தொடுப்பு.

          இடிபுரிந்தே ஒருவர் எள்ளிநகைக்கும் கிலே 
          மடிபுரிந்தார்பெறுவார் மாண்பினை இழந்தே  (மடி) 
                                படுப்பு.

         நெடுநீர்மறவி மடிதுயில் நான்கும் 
         கெடுநீரார் காமக் கலனாமே. 
                                முடிப்பு. 
         மடிமையே நல்லதோர் குடியினில் பிறந்தானே 
         அடிமைபுகுத்தியந்த பெருமையினைக் குலைக்கும் (மடி) 
                                சந்தம். 
         விடத்தகு சோம்பலே கடைப்பிடிப் பவனதன் 
             மடத்தன மொடுதுயர் படத்தகுமே 
         குடித்தனப் பாங்கினில் தடித்தனம் பெருகிடில் 
             கிடைத்திடும் நலமதைக் குலைத்திடுமே 
         
         பகுத்தறிவுக் கண்ணன் குறள்நெறிப்பாடலில் 
         வகுத்திடும் நன்னெறி வளம்பெற வுதவுமே       (மடி)

32


32