பக்கம்:குறள்நெறி இசையமுது 2.pdf/6

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மிகவும் சிறப்பு. 'உயர்திரு.செந்தமிழ்ச்செம்மல்.ப.கண்ணனார் அவர்கட்கு, மிக்க வணக்கம், நன்றி, குறள்நெறி இசையமுதினைப் படித்தேன். சுவைத்தேன், குறள் மணம் பரப்பத் தாங்கள் வகுக்கும் செயல்முறை மிகவும் சிறப்புடையதே!"

திருக்குறள், சி. முனிசாமி, விழுப்புரம், 15- 9-67. தலைவர், குறள் வளர்ச்சிப் பணிமனை,

பயனுள்ள நிகழ்ச்சி.

முத்தமிழ் முப்பால் என்ற இந்தக் கலை நிகழ்ச்சியானது, இயல் இசை கூத்து முறையில் திருக்குறளின் கருத்துக்களை சுவையோடு வழங்குகிறது. பாடல்கள் யாவும் தனித் தமிழிலும், தமிழி ைச முறையிலும் ஆக்கப்பட்டிருக்கின்றன. பாடல்கள் இனிமையானவை. பாடப் பாடப் புதிய மெருகு பெறக் கூடியவை. பாடகரும், நாட்டியச் செல்வியும் வெகு சிறப்பாகத் தமது கடமையை நிறைவேற்றினார்கள். திருவாளர், கண்ணனார் கொடுத்த கருத்து விளக்கம் மிக்க நன்று. இது நாடெங்கும்.வெளிநாட்டிலும் நடைபெற வேண்டிய பயனுள்ள நிகழ்ச்சியாகும்.

சலகை-கண்ணனார் நல்ல எழுத்தாளர்; நாடக ஆசிரியர். இவரது "நந்திவர்மன்" நாடகத்தை நான் பார்த்துப் பாராட்டியுள்ளேன். இவர் இசைத் துறையிலும் வல்லவர் என்பதை இன்று நான் காண்கிறேன், முத்தமிழிலும் வல்ல இவ ைர முத்தமிழ்க்கண்ணனார் என்றே நாம் அழைக்கலாம். பேராசிரியை. காமாட்சி-குமாரசாமி M.A:

23.9.67.ல் சேலம் பொருட்காட்சிக்

கலையரங்கில்,