அழகான கலை வடிவம்.
சலகை, ப. கண்ணன் அவர்களின் குறள்நெறி கலைக்குழுவினர் நடத்திய இந்தக் குறள்நெறிக் கலையரங்கில் இனிய தமிழிசையும் இன்பத்துப் பால் நாட்டியமும் சுவைத்தோம். இது வெறும் பொழுதுபோக்கல்ல; குறள் வகுத்தளித்த தமிழ் நெறியை எவருக்கும் புரிகின்ற முறையில் விளக்குகிறது, இந்த அரிய கலை நிகழ்ச்சி.
கலைகளிலே புதிய கருத்துக்கள்.சமுதாயத்தை முன்னேற்றும் எண்ணங்கள் இடம்பெறவேண்டும் என்கிற அறிஞர் அண்ணா அவர்களின் விருப்பத்தை இந்தக்கலையாக்கம்பூர்த்திசெய்வதாக இருக்கிறது. குறள்நெறி வளர்க்க திரு. கண்ணனார்க்கு இப்படி யொரு எண்ணம் தோன்றியதே பாராட்டுக்குரிய தாகும்.
திருக்குறளைப் படைத்த திருவள்ளுவரே இந்தக் கலை நிகழ்ச்சியைப் பார்த்திருப்பாரானால், "நமது குறளுக்கு இப்படியொரு அழகான கலை வடிவம் கொடுக்க முடிந்திருக்கிறதே!" என்று மூக்கின் மேல் விரலை வைத்திருப்பார்!
காஞ்சி என் கிருஷ்ணன் M.A.B.L, M.L.A. காஞ்சியில் 80.9-67.ல் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவில்,