பக்கம்:குறள்நெறி இசையமுது 2.pdf/8

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தமிழிசையை வளர்ப்போமாக.

தமிழ் நாட்டில் பிறமொழியாரின் ஆட்சி நடைபெற்ற பிற் காலத்திலும், தமிழகத்து மற்றக் கலைகள் போற்றப்பட்டு வக்தது. தெலுங்குப் பாடல்களும் வடமொழிப் பாடல்களும் தமிழ் இசை மரபையொட்டியே பாடப்பட்டு வந்தன. பெயர் புதிது; ஆயினும் மரபு பழையதாக இருந்து வந்தது.

தமிழகத்தில் குடியேறி வாழ்ந்த மற்ற மொழியார்க்குத் தமிழ்ப் பாடல்கள் அவ்வளவாகப் பயன் தரவில்லை. பாடுவோர். கேட்போர்தம் உள்ளத்தைத் தொடும்வகையில் இசையை நுகர் வதற்கு, அவரவர்களின் தாய்மொழியில் அமைந்த பாடல்களே (சாகித்தியங்களே) தேவையாயின.

ஆகவே, தமிழ்நாட்டில் குடியேறிய பிறமொழியார் தம் தாய்மொழியிலேயே பாடல்களைப் போற்றுவாறாயினர். அவற் றில் பல மிக உயர்ந்த பாடல்களாகவும் விளங்கின. ஆனால் பிறகு வந்த தமிழர் சிலர் தம் தம் தாய்மொழியே இசைப் பாடல் களுக்கு ஏற்றது என்ற உண்மை தெரியாமல்,தெலுங்கு மொழி ஒன்றே இசைக்கு உரியது என்று மயங்கினார்கள். அந்த மயக் கம்தான் இங்கும் ஏற்பட்டது.

"வித்துவான்கள் பழைய கீர்த்தனங்களைப் பாடம் பண்ணி புராதன வழிகளைத் தெரிந்து கொள்ளுதல் அவசியம். ஆனால், தமிழ்ச் சபைகளிலே எப்போதும் அர்த்தம் தெரியாத பிற பாஷைகளின் பழம் பாட்டுக்களை மீட்டும் மீட்டும் சொல்லுதல் நியாயமில்லை. அதனால் நமது ஜாதி ஸங்கீத ஞானத்தை இழந்து போகும்படி நேரிடும்" என்று கவிஞர் பாரதியார் செய்த எச்சரிக்கை இன்று தகுந்த பயனை கிளைத்திருக்கிறது.

இசை ஒர் உயர்ந்த கலை. அது மொழியைக் கடந்தது. இசைப் பாடல்கள் இசை நுகர்ச்சிக்குத் துணை செய்கின்றன. அந்தப் பாடல்கள் தமிழில் அமைந்தவைகளாக இருந்தால் தமிழர் இசையை நுகரமுடியும். இந்த உண்மையை அடிப்படை யாகக் கொண்டு தமிழிசையை வளர்ப்போமாக,

-மு. வரதராசனர்.

தமிழிசைச் சங்கம் வெள்ளி விழாக்கட்டுரை,