பக்கம்:குறள்நெறி இசையமுது 2.pdf/9

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



முன்னுரை

"குறள்நெறி இசையமுது"முதற்பகுதி நூல் வடிவுபெற்று எட்டுத்திங்களுக்குப்பிறகு இரண்டாம்பகுதிவெளிவருகின்றது.

இந்த இடைவெளியில் பாடல்களைப் படித்தவர்களும், சுவைத்தவர்களும் தந்த கருத்துக்கள்; எனது நம்பிக்கைச் சுடரைத் துண்டி விடுவதாயிருக்கின்றன.

பாடல்களும், கருத்துக்களும் பர விட கானும், இசைவாணர் டி. பி. பாலகிருஷ்ணன் அவர்களும், குறள்நெறி கலைக் குழுவினரோடு இசையரங்கும், நாட்டிய அரங்கும் நடத்தி வருகிறோம்.

இக்தப்பணி எங்களால் மட்டும் நிறைவேறுவதன்று. தகுதி படைத்த முத்தமிழ்க் கலைஞர்களின் நல்லாதரவு வேண்டும். இப்பாடல்களை இசையரங்குகளிலும், வானொலியிலும் பாடுவதாகப் பலர் வாக்களித்துள்ளனர். வானொலி நிலையத்தினர்க்கும் பாடுதற்கான ஒப்புதல் கொடுத்துள்ளேன். எதற்கும் தமிழ்ப் பெருமக்களின் ஆதரவு தேவை.

தமிழிசைச் சங்கத்தின் வெள்ளிவிழாக் கொண்டாடும் பொழுது இந்நூல் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். எனவே பேராசிரியர், மு. வரதராசனர் அவர்களின் கட்டுரைப் பகுதியும் இதிலே இடம் பெறுகின்றது.

கண்டும் படித்தும் கருத்துரை வழங்கிய அறிஞர் பெருமக்கள் மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், திருக்குறள் வி. முனிசாமி, பேராசிரியை காமாட்சி. குமாரசாமி, வழக்குரைஞர் காஞ்சி, என் கிருஷ்ணன் மற்றும் பல நண்பர்களுக்கும், கலைஞர்களுக்கும் எனது பணிவன்பான நன்றி உரித்தாகுக.


சலகை 29-12-67 ப.கண்ணன்.