பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. மாறுபடும் நீதி

நீதி என்று சொன்னவுடன் அனைவருக்கும் பொதுவாய், எக்காலத்தும் மாறாததாய் இருக்கும் ஒன்றையே அனைவரும் நினைப்பார்கள். ஒரளவுக்கு இவ்வாறு நினைப்பதும் நியாயமானதே. ஆனால், இந்த உலகத்தின் ஒரு தனிப்பட்ட சிறப்பு எது என்றால், எந்த ஒன்றும் மாறாமல், எக்காலத்தும் எல்லாவிடத்தும் நிலை பெற்றிருக்கும் என்று சொல்ல முடியாதிருக்கின்ற ஒரே சிறப்புத்தான். ஒரே நாட்டில், ஒரு காலத்தில் போற்றப் பட்ட ஒரு நீதி, மற்றொரு காலத்தில் அதே நாட்டில் ஏற்றுக் கொள்ளப்படும் என்றுகூடச் சொல்வதற்கில்லை.

இவ்வுண்மையை அறியாது போனால், பல சமயங் களில் இடர்ப்பட நேரிடும்; உலகில் நிகழ்கின்ற நிகழ்ச்சி களுக்கு, நல்ல முறையில் பொருள் செய்ய முடியாமல் வருந்தவும் .ே ந. ரி டு ம். ஒவ்வொருவர் செய்கின்ற செயலையும், அன்று சமுதாயத்தாரால் ஒப்புக் கொள்ளப் பெற்ற நீதி என்ற உரை கல்லில் உரைத்துத்தான் நியாய மானதா அன்றா என்று முடிவுக்கு வருகின்றோம். ஒரு சமுதாயத்தினர் ஒரு செயலை நீதியானது என்று கருது கின்றனர். அதே செயலை அதே காலத்தில் வேறோர் இடத்தில், அல்லது அதே இடத்திலுங்கூட வாழ்கின்ற மற்றொரு சமுதாயம் நீதியற்றது என்று கருதுகிறது. ஆகவே, எந்த ஒரு செயலையும் ஆராய்ந்து முடிவு