பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள் கண்ட வாழ்வு 0 101

அமைந்தவர்களுடைய வாழ்வை, எடுத்துக் கூறுகின்ற முறையில் அமைந்துள்ளன.

அதாவது, குறள் நமக்கு வழி காட்டுகின்ற முறை ஒன்று. அந்தக் குறளுக்கு நீதிகளை எடுத்துச் சொல்ல யார் கற்றுத் தந்தார்கள்? யாருடைய வாழ்விலிருந்து இந்த நீதிகளைக் குறள் எடுத்துக் கூறத் தொடங்குகிறது? அந்தப் பெரியவர்கள் வாழ்க்கைகளை நாம் கடைபிடிக்க முடியாது. அவர்கள் புற நடை (Exceptions) வாழ்க்கை வாழ்ந்தவர்கள். அந்த வாழ்விலிருந்து கிடைத்த சாரத்தைத்தான் குறள் நமக்குப் பக்குவப்படுத்திக் தருகிறது. சினம் கொள்ளக்கூடாது என்பதற்குக் குறள் ஒர் அதிகாரத்தையே செலவழிக்கின்றது. சினத்தைக் கொண்டவன் அழிந்துவிடுவது உறுதி என்றுகூடக் குறள் பேசுகிறது. என்றாலும், இதனை மீறிச் சினம் கொண்டு அதனால் வீடு பேற்றையே அடைந்த பெரியவர்களும் உண்டு.

- சோழ வளநாட்டில் சேய்ஞலூர் என்ற ஊரில் எச்சதத்தன் என்ற அந்தணனுக்கு விசாரசருமன் என்ற ஒர் அருமை மைந்தன் பிறந்தான். ஐந்து வயதிலேயே அனைத்துக் கலைகளையும் கற்றுத் தெளிந்த விசாரசருமன், பசுக்களைக் காத்தலின் அவசியத்தை உணர்ந்து, அவ்வூரிலுள்ள பசுக்கள் அனைத்தையும் தானே மேய்க்கத் தொடங்கினான். ஊரிலுள்ளவர்களும் இலவசமாக மாடு மேய்க்க ஒர் அந்தணச் சிறுவன் கிடைத்தவுடன், மகிழ்ச்சியோடு மாடுகளை ஒட்டிவிட்டார்கள்.

ஊரின் பக்கத்திலே ஒடுகின்ற மண்ணி ஆற்றங்கரை யில் மாடுகளைக் காலாற மேய விட்டு மணலிலே சிவன் கோயில் அமைத்து விளையாடத் தொடங்கினான் விசாரசருமன், காலா ற மேய்ந்த காரணத்தால் மாடுகள் இயல்பாகப் பாலைப் பெருக்கின. பால் கீழே போவதை அறிந்த விசாரசருமன் அப்பாலைக் குடங்களில் ஏந்தி