பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 0 அ. ச. ஞானசம்பந்தன்

ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்து விளையாடினான். நாளாவட்டத்தில் இதனை அறிந்த ஊரார்கள் அவனுடைய தந்தையாகிய எச்சதத்தனிடம் சென்று விசாரசருமன் செய்கின்ற செயலை எடுத்துக் கூறினார்கள்.

ஒரு நாள், மகன் மாடுகளை ஒட்டிச் சென்ற பிறகு எச்சதத்தன் அவன் பின்னேயே சென்று, என்ன நடைபெறு கிறது என்று காண்பதற்காக ஒளிந்திருந்தான். தந்தை வந்ததை அறியாத விசாரசருமன் தான் அன்றாடம் செய்யும் பூசையில் முழு மனத்தோடு ஈடுபட்டுவிட்டான். அபிஷேகம் நடைபெறுகின்ற நிலையில் ஒளிந்திருந்த எச்சதத்தன் வெளியே வந்து மகனைப் பலவாறு ஏசினான்; அடித்தான்; ஆனால், அச்சிறிய பெருந்தகை உள்ளத்தா அலும் உடலாலும் இறை வழிபாட்டில் கலந்துவிட்ட காரணத்தால், எச்சதத்தன் அடித்ததையோ ஏசியதையோ கவனிக்கவே இல்லை.

மேலும் கோபம் கொண்ட எச்சதத்தன், இறைவனுக்கு அபிஷேகம் செய்வதற்காக வைத்திருந்த பாற் குடங்களைக் காலால் எட்டி உதைத்தான். அபிஷேகப் பால் கீழே சிந்தியதை கண்ட விசாரசருமன் தியானம் கலைந்து திரும்பிப் பார்த்தான். தன் உடம்புக்குத் தந்தை செய்த துன்பத்தைப்பற்றி அவன் கவலைப்படவில்லை; இறைவன் பூசைக்கு ஊறு செய்தமை யால் கடுஞ்சினம் கொண்டான்; பக்கத்தே கிடந்த கோல் ஒன்றை எடுத்தான். அது மழுவாக (வெட்டும் ஆயுதம்) மாறியது. தந்தையின் கால்களைத் துணித்துவிட்டான்.

விசாரசருமர் பிற்காலத்தில் சண்டேசுர நாயனார் என்று வழங்கப்பட்டார், எல்லை மீறிய சினம் கொண்டு. அதன் பயனாகத் தந்தையின் கால்களையே வெட்டிய ஒருவர், பெரிய அடியார் ஆயினார் என்றால், குறள் சொல்லிய வெகுளாமை என்ற அதிகாரம் இவரளவில்