பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள் கண்ட வாழ்வு O 103

பொய்த்துவிட்டதோ என்று கருத வேண்டா. அறம் மாறுபடும் என்று கருதிய குறள் நம் போன்றவர்கட்கு வெகுளாமை என்ற அதிகாரத்தைச் சொல்லிவிட்டு, இத்தகைய பெரியோர்களின் வாழ்க்கையைச் சாறாகப் பிழிந்து நீத்தார் பெருமை போன்ற அதிகாரங்களில் பேசுகிறது. இவை குறள் நமக்காகக் கண்ட வாழ்வன்று: குறள் தோன்றுவதற்கு மூலகாரணமாய் அமைந்த வாழ்க்கைகளாகும். குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி, கணமேயும் காத்தல் அரிது!’ என்ற குறளுக்கு இலக்காகும் இவர் வாழ்வு. •