பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 O அ. ச. ஞானசம்பந்தன்

வேண்டா. அவர்கள் உரிமை வழங்கப்படாத நாட்டிலே தான் அதைப்பற்றிப் பெரிதாகப் பேசும் இயல்பும் இருந்: திருக்கும். ஆனால், உரிமை இயல்பாகவே அளிக்கப்பட்ட

ஒரு நாட்டில் அதுபற்றித் தனியே பேச வேண்டிய

இன்றியமையாமை இல்லை. உதாரணமாக வயிறு

ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமான உறுப்புத்தான்.

என்றாலும், அவ்வயிற்றை ஓயாது நினைத்துக்கொண்டு

இருப்பார், அல்லது அது பற்றிப் பேசுவார் யாரும் இலர்:

ஏன்? வயிற்றில் பசியோ, நோயோ ஏற்பட்டாலொழிய

ஒருவரும் வயிற்றைப் பற்றிப் பேசுவது இல்லை;

நினைப்பதுகூட இல்லை. அதேபோல மகளிர் உரிமை

என்பது மிகச் சிறந்த ஒன்றாக இருப்பினும் அன்றாட

வாழ்க்கையில் இருந்து வந்த காரணத்தால் அதுபற்றித்

தனியே பேசவேண்டிய இன்றியமையாமை ஏற்பட

இல்லை.

மகளிரைப் பற்றிப் பேச வந்த திருக்குறள் வாழ்க் கைத் துணை நலம்’ என்ற ஒர் அதிகாரத்தை வகுக் கின்றது. வாழ்க்கைக்குத் துணையாக வரக்கூடிய ஒரு பெண்ணிடத்தில் இருக்க வேண்டிய சிறப்புக்களை எல்லாம் வரிசைப்படுத்திக் கூறுகின்றார் குறள் ஆசிரியர்.

‘கற்பு எனப்படும் மன வலிம்ை ஒரு பெண்ணின் மாட்டு இருந்துவிடுமேயானால், அவளைவிடப் பெறுதற் கரிய பொருள் வேறு யாது?’ என்று கேட்கின்றார். இவ்வாறு எல்லாம் மகளிரின் சிறப்பைப் பற்றிப் பேசி வந்த குறள், ஒரு பாடலில் மகளிர்க்குரிய இலக்கணத்தை அழகாக வகுக்கின்றது.

ஒரு பெண் முதலாவது தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும்; அடுத்தபடியாகத் தன்னைக் கொண்டவனாகிய கணவனைக் காக்கவேண்டும்; மூன்றாவதாகத் தன்னுடைய கணவனுக்கும் தனக்கும் ஏற்பட்டுள்ள புகழை, நற். பெயரைக் காப்பாற்ற வேண்டும். இம்மூன்று காரியங்,