பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 O அ. ச. ஞானசம்பந்தன்

கூட, அதனை அளவு மீறிச் செய்வார்களானால், அதனால் துன்பந்தான் மிஞ்சும். ஒரளவு சகிப்புத்தன்மையோடு தன் துயரத்தைத் தானே பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறவர்களுக்குக்கூட ஊராரின் இத்தலையீடு மனவருத்தத்தையே உண்டாக்கும். எனவே, கண்ணகி தன்னைக் காத்துக்கொள்ள முடியாமல் வருந்துகின்ற சூழ்நிலை ஏற்பட்டது.

இனி அவளுடைய துயரத்தைப் பங்கிட வரும் அனைவருமே அவள் கணவனுடைய செயலை இடித்தும், இழித்தும் பேசவேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கும் என்று சொல்லத் தேனவயில்லை. கற்புக்கடம் பூண்ட கண்ணகி, அத்தகைய பழிச்சொல் தன் கணவனுக்கு வாராமல் இருக்க என்ன பாடுபட்டாளோ, நாம் அறியோம்! அவளால் முடிந்த வரை தன்னையும் தன் கணவனையும் காத்தாள். இறுதி வரை அவன் துயர் போக்க அவனோடு வாழ்ந்த பெருமாட்டி, இறுதியாக அவன் இறந்தபொழுதுங்கூட ஒரே ஒரு வருத்தத்தைத் தான் மிகுதியாக அடைகின்றாள். மூன்றாவதாக உள்ள தகை சான்ற சொல் போய்விடுகின்ற நிலைமை மதுரை மாநகரில் எழுந்தது.

‘பெருநிலம் முழுதாளும் பெருமகன் தலைவைத்த, ஒரு தனிக் குடிகளோடு உயர்ந்து ஓங்கு செல்வத்தா னாகிய கோவலன், இன்று இம்மதுரையில் கள்வன் என்ற பெயர் சூட்டப்பட்டுக் கொல்லப்பட்டான். பிறந்தவர் இறந்து தீரவேண்டும் என்ற உண்மையை அறியாதவள் அல்லள் கண்ணகி, எனவே, கணவன் இறந்த துயரத்தைக் காட்டிலும் அதிகமாக, ‘அவன் கள்வன்’ என்று சொல்லப்பட்டதனால் துயர் அடைந் தாள். உடனே கதிரவனை நோக்கி, “ஐயா! உலகத்தி லுள்ள பொருள்களை எல்லாம் உயரத்திலிருந்து கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு இருக்கிறாயே! என்னுடைய கணவன் கள்வனா?’ என்ற பொருளில்