பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 0 அ. ச. ஞானசம்பந்தன்

வாய்மை இருக்குமானால் போதுமா? உள்ளத்தைப் பற்றிக் கவலையில்லையா? பொய் சொல்ல வேண்டு. மென்று நினைக்கின்றவர்கள் கூடப் பல சமயங்களில் அது இயலாத காரணத்தால் வாய்மையைப் பேசி விடுகின் றார்கள்! உண்மை பேசுதலைப் பற்றி மட்டும் வள்ளுவர் குறிப்பிட்டிருப்பாரேயானால் குற்றமற்ற ஒரு மன நிலையை அவர் குறிப்பிட்டிருக்க முடியாது. ஆகவே, மிகவும் கவனத்தோடு, உள்ளத்திலே பொய்ம்மை. இல்லாமல் வாழக் கூடுமேயானால், அங்ஙனம் வாழ்கின்ற ஒருவன் உலகத்திலுள்ளவர்களுடைய உள்ளத்தில் எல்லாம். வாழ்கின்றான் என்னும் கருத்துப்பட,

‘’ உள்ளத்தால் பொய்யாது ஒழுகின், உலகத்தார்

உள்ளத்துள் எல்லாம் உளன்’ என்று பாடுகிறார்.

இத்தகைய ஒரு குறளை இந்நூல் பாடுவதற்கு, உலகம் தோன்றிய நாளிலிருந்து ஒரே உதாரணம், அரிச்சந்திரனுடைய வரலாறு ஒன்றுதான். ஆனால், அந்த அரிச்சந்திரன்கூட, உலகத்தார் அனைவராலும் அறிந்து கொள்ளப்பட்டான் என்று சொல்வதற்கில்லை. ஏனென்றால், காசியில் சென்று, அவன் மனைவியை விற்று, அப்பால் தன்னையும் விற்றுக்கொண்டு, இடுகாடு காக்கின்றவனாய் நின்ற நிலையில், அவனை யாரும் அறிந்து கொண்டதாகத் தெரியவில்லை. எனவே, உலகத்தி லுள்ளவர்கள் அனைவரும் அவனை அறிந்து கொள்ள முடியவில்லை. அப்படியால், குறள் கூறியது ஓரளவுக்கு உயர்வு நவிற்சி அணிதானோ என்றுகூடச் சிலர் நினைக்கலாம். இவற்றையெல்லாம் நன்கு ஆராய்ந்த குறள், மிகவும் கவனத்தோடு பேசுகிறது. உலகத்தில் உள்ளவர் அனைவரும் அவனை அறிந்து கொள்வார்கள் என்று சொல்லாமல், உலகத்திலுள்ளவர்களுடைய உள்ளத்திலெல்லாம் வாய்மை பேசும் அப்பெரியவன் குடியிருக்கிறான்’ என்று மட்டும் சொல்லிச் செல்கின்றது.