பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள் கண்ட வாழ்வு C 115

டார்கள் என்பது உண்மை என்றாலும், இந்தத் தனி மனிதர் மட்டும் இந்த ஒரு குறளை அப்படியே வாழ்ந்து காட்டி, அதனால் உலகத்தார் உள்ளத்துள் இடம் பிடித்துக் கொண்டார். பல்வேறு நல்ல நெறிகளைப் போதித்து, வா ழ் வி லு ம் கையாண்ட பெரியோர் அனைவரும் தாம் போதித்த நன்னெறிகள் பலவற்றுள், வாய்மையும் ஒன்றாகக் கொண்டார்கள். ஆனால்,

‘’ பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற

செய்யாமை செய்யாமை நன்று” என்றும்,

சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு” என்றும் கூறிய திருக்குறள் ஒன்றுதான் வாய்மைக்கு இவ்வளவு பெரிய மதிப்பைத் தந்தது.

அரிச்சந்திர நாடகத்தைப் பார்த்தவர்களும், திருக்குறளைக் கற்றவர்களும், பலப் பலர் உண்டு. ஆனால், ஒரு மோகன்தாஸ்தான், அரிச்சந்திர நாடகத்தைப் பார்த்துவிட்டு, ‘நாமும் ஏன் அங்ங்ணம் வாழக்கூடாது?’ என்று நினைத்தார்! இந்தக் குறளை அவர் கற்றாரோ இல்லையோ, நாம் அறியோம்! என்றாலும், இக்குறள் கூறிய வாழ்வைக் கடைசி வரை வாழ்ந்து காட்டிய பெருமை அந்த ஒரு மனிதருக்கே உண்டு. எனவே, அன்றும், இன்றும், என்றும், அவர் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் இருக்கக்கூடிய பெருமையைப் பெற்றார். இந்த ஒரு குறள் அவருடைய வாழ்க்கையின் சாற்றைப் பிழிந்து காட்டுகின்றது.

‘ உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்

உள்ளத்துள் எல்லாம் உளன்."