பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள் கண்ட வாழ்வு C 117

‘அஜந்தா’ முதலிய இடங்களில் தீட்டப்பட்டுள்ள ஒவியங்களும், சித்தன்ன வாசலில் (புதுக்கோட்டை அருகே) உள்ள ஒவியமும், இலங்கையில் சிகிரியா’வில் உள்ள ஒவியங்களும் தமிழ் நாட்டு ஓவியக் கலைக்கு எடுத்துக் காட்டாய் உள்ளவை. ஆ ைண ேய ா பெண்ணையோ இவ்வோவியங்களில் வரையும் பொழுது இந்நாட்டு ஓவியர்கள் ஒரு முக்கியமான குறிப்பைப் பெற வைத்தார்கள். அந்த ஒவியத்திலுள்ள உருவத்தின் முகப் பகுதியில் பெரும் பகுதி அடைத்துக் கொண்டிருக்கும் உறுப்பு, கண்களேயாகும். நீண்டு- அதாவது காதுகள் வரை நீண்டு சென்றும், கடல்போல அகன்றும் இருக்கும் முறையில் இக்கண்கள் அமைக்கப்பெற்றன.

‘கண்ணில் சிறந்த உறுப்பு இல்லை,” என்று ஒரு பழமொழியும் தோன்றிற்று என்றால், இந்நாட்டவர் கண் களுக்கு ஏன் இத்துணைச் சிறப்புத் தந்தனர் என்ற கேள்வி நம்மையும் அறியாமல் தோன்றுகிறது. முகத்திற்கு அழகு செய்கின்றது என்பது உண்மையாயினும், அந்த ஒரே காரணத்திற்காக இவர்கள் கண்ணுக்கு அதிக ம தி ப் புத் தந்தார்கள் என்று சொல்வதற்கில்லை. அழகுக்கும் அப்பாற்பட்ட ஒர் அழகை, அதாவது புற அழகுக்கு அப்பாற்பட்டுள்ள அக அழகை, இவர்கள் கண்ட தனால்தான் போலும் இங்ங்ணம் கண்ணுக்குப் பெரு மதிப்புத் தந்துள்ளார்கள் என்று கூற வேண்டும்.

‘அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்,’ என்ற குறள், உள்ளத்தில் உண்டான உணர்ச்சிகளை முகமே எடுத்துக்காட்டும் என்று கூறு கிறது. இதற்கு உவமை கூற வந்த குறள் கண்ணாடி யானது உள்ளே இருக்கின்ற பொருளை ஒளிவு மறைவின்றி எடுத்துக் காட்டுவது போல, முகமும் காட்டும் என்று கூறுகிறது. அப்படியானால், முகம் என்று சொல்லும் பொழுது கண், மூக்கு, செவிகள் அடங்கிய முழுப் பகுதி யையுமே இங்குக் குறிக்கின்றாரா ஆசிரியர் என்பதைச்