பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள் கண்ட வாழ்வு O 121

இந்த உண்மையை அறியாத மோசி கீரனார் மெத்தை விரித்திருந்த அந்தக் கட்டிலைக் கண்டவுடன் களைப்பு மேலிட்டவராய் அதன்மேல் படுத்து உறங்கிவிட்டார். வெளியே சென்றிருந்த அரசன் அரண்மனையின் உள் நுழைந்தான்; புலவர், முரசு கட்டிலில் உறங்குவதைக் கண்டான். முரசு கட்டிலில் ஏறியவர்களைக் கொன்று விடவேண்டும் என்ற சட்டத்தை ஒரு வினாடி மன்னன் மறந்துவிட்டான்; களைத்து வந்த ஒரு புலவர் பெரு மகனார் தனது முரசுக் கட்டிலில் உறங்குவது தன் பாக்கியம் என்று கருதி, உடனே மயில் தோகை விசிறியை எடுத்துக் கொண்டு வந்து புலவருக்கு விசிறத் தொடங்கி விட்டான்; விழித்து எழுந்த புலவர், அரசன் செயலைக் கண்டார். ‘ஆராயாமல் இப்படுக்கையில் ஏறிய என்னை இரண்டாக வெட்டித் தள்ளுவதை விட்டுவிட்டு உன் லுடைய பெரிய தோள்களால் குளிர்ச்சி பொருந்த விசினாயே! இக்கண்ணோட்டம் எனக்கு மட்டும் காட்டப் பட்டதாக நான் கருதவில்லை. அதற்குப் பதிலாக நான் கற்ற தமிழுக்கே இதனை நீ காட்டினாய் என்று கருது கிறேன்!” என்ற கருத்தில் பாடினார்.

இத்தகைய வரலாறுகளை நினைந்துதான் போலும் குறள்,

‘ பண் என்னாம் பாடற்கு இயைபு இன்றேல்? கண் என்னா

கண்ணோட்டம் இல்லாத கண்?’

என்றும் பாடிச் செல்கிறது.