பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. பயன் மரம்

உடையவர்கள், இல்லாதவர்கள் என்ற வேற்றுமை உலகத்தில் என்றுமே உண்டு. ஆனால், உடையவர்கள் என்பவர்கள் கேவலம் செல்வத்தை மட்டும் உடையவர் களாய் இருந்து விடாமல், நல்ல பண்பாட்டையும் மன நிலையையும் உடையவர்களாய் இருப்பதே சிறப்பாகும். ஆனால் இவ்வியல்பு அனைவருக்கும் எளிதில் கிடைக்கக் கூடிய ஒன்றன்று. செல்வத்தைப் பெற்றிருப்பவருள் பலர், அதன் பயன் யாது என்பதை நினைப்பதே இல்லை. சேம நிதியில் (பாங்கு) பொருளை வைத்திருப்பதற்கும் தனிப்பட்டவர் வைத்திருப்பதற்கும் வேறுபாடு அதிகம் இல்லை.

சேம நிதியில் உள்ள பொருள் சேம நிதிக்குச் சொந்தமானது அன்று. பலருக்கும் சொந்தமான பொருள், பாதுகாவல் கருதியும், வேண்டுமான பொழுது எடுத்துக் கொள்ளக் கூடிய வசதி கருதியுமே சேம நிதியில் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இல்லாமல், பொருளை அந்த நிதியில் போட்டவுன் அங்கு உள்ளவர்கள் அதனைத் தம்முடைய பொருளாகக் கருதிப் பயன்படுத்தத் தொடங்கி விடுவார்களேயானால், சேம நிதியின் நிலையும், அதில் பணம் போட்டவர்களின் நிலையும் என்ன ஆகும் என்பது. சொல்லத் தேவையில்லை. ஆனால், இக்காலத்தில் பல சேம நிதிகள் பிறருடைய பொருளை எல்லாம் தம்முடைய