பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள் கண்ட வாழ்வு O 123

பொருளாகக் கருதி, அப்பொருளைப் பயன்படுத்து கின்றன. எனவே, தனிப்பட்ட செல்வர் பலரும் தம்மிடம் உள்ள செல்வம் தம்முடைய சொந்த உபயோகத்திற் காகவே தரப்பட்டதாகக் கருதி அதனைப் பயன்படுத்து கின்றனர்.

இவை இரண்டுமே தவறான செயல்கள் என்று சொல்லத் தேவையில்லை. செல்வத்தை, அதிலும் பெருஞ் செல்வத்தைப் பெற்றதன் பயன் ஒன்றே ஒன்றுதான். அதாவது, அதனைப் பாதுகாத்து, வழங்கி, அதனால் பெறும் இன்பத்தை அனுபவிக்க வேண்டுவதேயாகும். இதைக் கருதிதான் புறநானூறு செல்வத்துப் பயனே ஈதல், துய்ப்பேம் எனினே தப்பந பலவே,’ என்று சொல்லிச் செல்கிறது. செல்வத்தின் பயன் அதனை வழங்குவதால் பெறும் இன்ப அனுபவமேயாகும். தானே அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கின்றவன்கூட என்ன செய்கிறான்? பணத்தை அப்படியே தின்று அனுபவிக்க முடியாது அல்லவா? எனவே, பணம் அனுபவப் பொருளை, அது எதுவாக இருப்பினும், பெற ஒர் அடையாளப் பொருளாய் அமைந்து விட்டது.

பணத்தைக் கொடுத்து அனுபவப் பொருளை வாங்கி அனுபவிப்பதனால் மகிழ்ச்சி தோன்றுகிறது. பணம் படைத்ததன் பயன் ஒரு வகையில் அதுதான் என்று கூடக் கூறிவிடலாம். ஆனால், அதை விட அதிகப்படியான அனுபவம் மற்றொன்று உண்டு. பொருளை வாங்கி அனுபவிக்கும் பொழுது, அனுபவிப்பவன் மட்டுமே மகிழ்ச்சி அடைகிறான். ஆனால், பொருளைப் பிறருக்கு வாரி வழங்கும்போது உண்டாகின்ற இன்பத்தில் இரண்டு பங்கு இருத்தலைக் காணலாம். முதலாவது, பொருளைத் தருதலினால் தான் பெறும் இன்பம்; இரண்டாவது, அப் பொருளைப் பெற்றவன் அடைகின்ற இன்பம். இவை இரண்டையும் அல்லாமல் மூன்றாவதாக ஒர் இன்பமும் இங்கே உண்டு என்பதை ஒரு சிலரே அறிவர். கொடுத்துப்