பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 O அ. ச. ஞானசம்பந்தன்

பழக்கமுடையவர்கள் ம ட் டு மே அம் மூன்றாவது இன்பத்தை அறிய முடியும். -

அதாவது, பொருளைப் பெறுகின்றவர் முகம் மலரு வதைக் கண்டு, கொடுக்கின்றவர் மறுபடியும் மகிழ்ச்சி அடைகின்றார். எனவே, கொடுக்கும் பொழுது இன்பம். கொடுக்கப்பட்டவர் பெறும் இன்பம், அந்த இன்பத்தைக் கண்டு கொடுப்பவர் பெறும் இன்பம் என இன்பம் மூன்று வகைப்படுதலைக் காணலாம். கேவலம் இன்று இருந்து நாளை அழியும் பொருளைக் கொடுத்து மூன்று இன்பத்தைப் பெறுவது எவ்வளவு சிறப்புடையது. வியாபார முறையைப் பார்த்தாலுங் கூட ஒன்றைக் கொடுத்து மூன்றைப் பெறுவது மிகவும் இலாபகரமான காரியந்தானே? அப்படி இருக்க, மனிதர்கள் ஏன் இந்த எளிய காரியத்தைப் புரிந்து கொள்வதில்லை என்று கேட்கிறார் வள்ளுவர்.

‘’ ஈத்து உவக்கும் இன்பம் அறியார்கொல்? தாம் உடைமை

வைத்து இழக்கும் வன்க ணவர்?'’ என்ற குறளில், ஒன்றைக் கொடுத்து மூன்றைப் பெறாத வினோதமான மனிதர்களைக் கண்டு வியப்படை கின்றார் வள்ளுவர். எவ்வளவுதான் வள்ளுவர் போன்ற பெரியவர்கள் இதுபற்றிப் பாடி இருந்தாலும், ஈதல் என்பது அவ்வளவு எளிமையான காரியமன்று. இன்றேல், பெரிய அடியாராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகளுங்கூட, ‘கொடுக்கிலாதானைப் பாரியே என்று கூறினும் கொடுப் பார் இலை’ என்று பாடி இருப்பாரா?

கொடுத்தலாகிய இயல்பு பிறவியிலேயே அமைய வேண்டிய ஒன்றாகும். அடுத்தபடியாக உள்ள கொடுக்கும் இயல்பு ஓரளவு பழக்கத்தால் வருவதாகும். முதலாவது உள்ள பிறவி இயல்பைக் கொடை என்றும், வள்ளன்மை என்றும் கூறுகிறோம். ஆனால், பழக்கம் பற்றியும், தேவை பற்றியும் கொடுக்கப்படுவதை, ஒப்புரவறிதல்'