பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 O அ. ச. ஞானசம்பந்தன்

உவமையை வகுக்கின்றது. கிராமங்களிலே மிகவும் வயதான வேப்பமரம் நிற்பதைச் சிலர் கண்டிருக்கலாம்; அம்மரத்தின் அடிப்பகுதி எல்லாம் வெட்டும் குத்துமாக இருத்தலையும் காணலாம்; மேலே கிளைகள் ஒடிக்கப் பட்டு இருக்கும். வேர்ப்பகுதி பலவிடங்களில் தோண்டப் பட்டு இருக்கும். இதன் காரணம் யாது? பழமையான அந்த வேப்பமரம் தப்பாமல் மருந்துக்குப் பயன்படக் கூடிய ஒன்று.

அதனுடைய கிளை, இலை, அடிமரம், பட்டை, வேர் ஆகிய அனைத்துமே மருந்துக்குப் பயன்படுதலால், ஒவ்வொரு பகுதியையும் வெட்டிக் குத்தி மக்கள் பயன் படுத்திக் கொள்கின்றார்கள். ஒப்புரவு செய்கின்ற பெரு மக்களுள்ளும் இந்த மருந்து மரத்தின் இயல்பினைப் பெற்றவர்களும் உண்டு.

திருநெல்வேலி ஜில்லாவில் உள்ள காயற்பட்டினத்தில் சீதக்காதி என்ற ஒரு முகமதியப் பெருஞ் செல்வர் இருந் தார். அவர் பெருங்கல்வி நிறைந்த பெரும்புலவராயும் இருந்தார்; செல்வம் பெற்றதன் பயன் ஈதல் என்பதை அறிந்ததோடு, காது பெற்றதன் பயன் இனிய தமிழைக் காதாரக் கேட்பதேயாகும் என்பதையும் நன்கு அறிந்திருந் தார். தமிழ்ப் புலவர்களை வரவேற்று உபசரிப்பதில் அவருக்கு நிகர் ஒருவரும் இல்லை. புலவர்கட்கு மட்டும் பரிசில் தந்தாரோ என்று யாரும் நினைக்கவேண்டா. ‘ஊரிலே பஞ்சம் வந்து நெல்லும், பொன்னும் சம எடையாக விற்றபோது, அன்னதானத்துக்கு மார்தட்டிய துரை சீதக்காதி வரோதயனே!’ என்று படிக்காசுப் புலவரால் பாராட்டப்பெற்றவர். எனவே, வறுமையால் வாடிய மக்கள் அனைவர்க்கும் வேற்றுமையின்றி வாரி வழங்கிய பெறுமை சீதக்காதிக்குரியது.

இவ்வாறு சாதி சமய வேறுபாடும் இன்றி அனைவருக் கும் வழங்கிய சீதக்காதி, ஒரு நாள் விண்ணுலகு சென்று