பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள் கண்ட வாழ்வு O 127

விட்டார். இதனை அறியாத ஒரு புலவர் அவரைக் காண வருகையில், சீதக்காதி மரித்துவிட்டார்’ என்பதைக் கேள்விப்பட்டுச் சமாதிக் குழிக்கு ஓடினார். அப்பொழுது தான் வள்ளலைக் குழிக்குள் வைத்து மூடிக் கொண் டிருந்தார்கள். புலவருக்குத் துக்கம் தாங்கவில்லை. சீதக்காதி இறந்ததால் புலவர்கட்கு ஏற்பட்ட நஷ்டத்தைக் குறிக்க ஒரு பாடல் பாடினார். அதில், ‘தமிழ் நாவலரை ஒட்டாண்டியாக்கி, அவர்கள் வாயில் ஒருபிடி மண் போட்டான்; அவனும் ஒளித்தான் சமாதிக் குழி புகுந்தே’ என்று பாடினார்.

அவர் நொந்து பாடியவுடன் சீதக்காதியின் கை ஒன்று வெளியே நீண்டதாம், அக்கையில் விலையுயர்ந்த மோதிரம் ஒன்று இருக்கவே, அதனை எடுத்துப் புலவருக்கு வழங்கிவிட்டார்கள். இதனால் செத்தும் கொடை கொடுத்தான் சீதக்காதி’ என்ற பழமொழியும் தோன்ற லாயிற்று.

‘ மருந்து ஆதித் தப்பா மரத்து அற்றால் செல்வம்

பெருந்தகை யான்கண் படின் ‘ என்ற குறள் வாழ்வை அப்படியே வாழ்ந்து காட்டிய

பெருமை சீதக்காதிக்கு உண்டு.