பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள் கண்ட வாழ்வு O 129

ஒருவரும் சென்னை எழும்பூர் நிலையத்தில் புகை வண்டிப் பிரயாணத்திற்குக் காத்துக் கொண்டிருந்தனர். அவர்களை யாரென்று அறிந்து கொள்ளக் கூட ஒருவரும் அங்கில்லை. சிறிது நேரத்திற்கெல்லாம் பலர் புடை சூழ ஒருவர் வந்தார். அவர் உடையிலிருந்தே பெரிய இடம்’ என்பது நன்கு தெரிந்தது, அனைவரும் அப்பெரிய இடத்தைச் சேர்ந்த பிரமுகரை வண்டிக்குள் ஏற்றிவிட்டனர் ஒருவர் அவருடைய படுக்கையைத் தட்டி விரித்தார். பெரிய இடத்தார் உஸ், உஸ்’ என்று பெருமூச்சு விட்டுக் கொண்டே இங்கும் அங்கும் திரும்பிப் பார்த்தார். உடனே, உடன் வந்தவர் ஒடோடிச் சென்று பனிக்கட்டி யுடன் கூடிய குளிர்ந்த பானம் ஒன்றை வாங்கி வந்தார் இந்த விஞ்ஞானப் பெருமக்கள் இருவரும் இக்காட்சியைக் கண்டு மலைத்து நின்று விட்டனர். இவர்கள் இருக்கும் வண்டிக்குள் ஏற முடியாதபடி பிரமுகரை வழியனுப்ப வந்த கூட்டம் வழி அடைத்துக் கொண்டிருந்தது.

இறுதியாகப் பிரமுகர் யார் என்று விசாரித்த பொழுது, பெருஞ்செல்வர் என்ற மெய்ம்மை தெரிய வந்தது. பெரும் பொருள் படைத்தவர் என்பது தவிர அவரிடம் வேறு சிறப்பு ஒன்றும் இல்லை கல்வி வாசனையே இல்லாதவர் என்றாலும், பலர் அவர் பின்னே செல்வதில் குறைவில்லை.

எந்த மொழி பேசுபவராய் இருப்பினும், எந்த நாட்டவராய் இருப்பினும், பலரும் ஒருவரை மதிக்க வேண்டுமாயின், அந்த ஒருவரிடம் தனிப்பட்ட ஒரு சிறப்பு இருத்தல் வேண்டும் தனிப்பட்ட சிறப்பு எதுவாக இருத்தல் கூடும்? அனைவரும் இட மொழி வேறுபாடு அற்று அந்தச் சிறப்பை அறிய வேண்டுமாயின், அது கால தேச வர்த்தமானம் கடந்ததாய், எல்லா நாட்டினரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாய் இருத்தல் வேண்டும். அத்தகைய ஒரு பொருள் யாது: கல்வியே என்று சொல்லத் தேவை இல்லை.

கு - 8