பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 0 அ. ச. ஞானசம்பந்தன்

மேலே காட்டிய உதாரணத்தில் கல்வியால் பெரிய விஞ்ஞானிகளைப் பற்றிக் கவலைப்படாமல், பொருட் செல்வம் உடையவர்களையே மக்கள் கூட்டம் சுற்றி நிற்பதைக் கண்டோம். அவ்வாறானால், கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று கூறுவது பொருத்த மானதா என்ற வினாத்தோன்றும். பொருட்செல்வரை அவருடைய ஊரில் உள்ளவர் மட்டுமே மதிப்பர்; அதுவும் அவரிடம் ஏதேனும் ஒரு பயனைக் கருதியே சுற்றி வருவர். அவர் ஒன்றுமே தாராத உலோபியாயினும் சுற்றிவரும் கூட்டத்திற்குப் பஞ்சம் இராது. முடியுள்ள தேன் குடத்தி விருந்து தேனைச் சுவைக்க முடியாவிடினும், எறும்புகள் அதைச் சுற்றி வருவதுபோல இக்கூட்டம் சுற்றி வரும்; அதில் வியப்பில்லை.

ஆனால், சுற்றி வருவதும் இச்சகம் பேசுவதும் வேறு; உண்மையில் மதிப்பது என்பது வேறு; கற்றறிந்தவர்களை வேறு ஊதியம் ஒன்றையும் கருதாமல் உண்மையிலேயே உலகத்தார் மதிப்பர்; அவர்மாட்டு அன்பு செய்வர்.

பூரீவைகுண்டத்தில் இன்றைக்கு முந்நூறு ஆண்டுகட்கு முன்னர்க் குமரகுருபரர் என்ற பெரியவர் தோன்றினார்; இளமையிலேயே சிறந்த கல்வியும் பரந்த கேள்வி ஞானமும் பெற்று இனிய கவிதைகள் புனைவதில் வல்லவராய் விளங்கினார்; மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த திருமலை நாயக்க மன்னனிடம் தம் வித்தகப் புலமையை வெளிப்படுத்திப் பெரும் பரிசில் பெற்று விளங்கினார்; திருக்குறளின் கருத்துக்களை எளிய வெண்பாக்களில் நீதி நெறி விளக்கம்’ என்ற நூலாகப் பாடினார்; மதுரையில் கோயில் கொண்டிருக்கும் அன்னை மீனாட்சிமேல் மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்’ என்ற நூலைப் பாடி அரங்கேற்றினார்; மன்னனிடம் பெற்ற பரிசில்களோடும் விருதுகளோடும் தருமபுரத்தை வந்து அடைந்தார். - -