பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 0 அ. ச. ஞானசம்பந்தன்

அப்பொருளைக் கொண்டு தனியே மடம் ஒன்று அமைத்துச் சமயத்தைப் பரப்புமாறு சீடருக்குக் கட்டளை இட்டார் தலைவர்.

அன்றியும், தமிழ் வழங்கும் நாட்டில் மட்டும் அல்லாமல், பிறமொழி வழங்கும் நாட்டிலும் சென்று, இத்தமிழ் நாட்டின் பெருமையைத் தம் சீடர் எடுத்துக் கூற வேண்டும் என்று விரும்பினார் தருமையாதீனத் தலைவர்.

அறிவுக் கல்வியும், உணர்வுக் கல்வியும் ஒன்று. கூடிய வழியே பெருநன்மை உண்டாக முடியும். இவை இரண்டையும் நிரம்பப் பெற்றிருந்த குமரகுருபரர், நேரே காசிக்குச் சென்றார். முகம்மதிய மன்னர் ஆட்சி செய்து கொண்டிருந்த அந்நாட்டில், கலைமகளின் அருளால் விரைவில் அவர்களுடைய மொழியைக் கற்றறிந்தார்; அத்தேவியின் அருளால் சிங்கம் ஒன்றைப் பெற்று, அந்த ஒரு சிங்க முதுகின்மேல் ஏறிச் சென்று மன்னவனைக் கண்டார்; அவனுடைய மொழியிலேயே பேசி அவனை மகிழ்வித்தார்.

தமிழ் நாட்டு இளந்துறவியாரது கல்வி ஒழுக்கம் ஆகியவற்றைக் கண்டு மகிழ்ந்த மன்னன் அவர் விரும்பின பரிசிலைத் தர இசைந்தான்.

தமிழும் சைவமும் பரப்பவே காசிக்குச் சென்ற அப் பெரியார், தாம் ஒரு மடம் கட்ட விரும்புவதாகவும், அதற்கு இடம் வேண்டும் எனவும் கூறினார்; இரண்டு: பருந்துகள் வட்டமிடும் பொழுது அவற்றின் இடைப்பட்ட இடம் தமக்கு வேண்டும் என்று கேட்டார். மன்னனும் அவ்வாறு தருவதாக இசைந்தான்.

மறுநாள் பொழுது புலர்ந்தது. மன்னனுடைய

அரண்மனையைச் சுற்றி இரண்டு பருந்துகள் வட்டம் இட்டனவாம். தன் சொல்லைக் காக்க விரும்பிய மன்னன்,