பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள் கண்ட வாழ்வு O 137

வரக்கூடும். வாழ்க்கையில் வெற்றியைக் கருதி இவ்வாறு செய்தல் தவறாக இருக்கலாம். ஆனால், வாழ்க்கையின் அடிப்படைக்கே ஆபத்து வரும்பொழுதோ? அதாவது, ‘எல்லையற்ற வறுமையால் துடிக்கின்றேன்; யான் மட்டுமல்லேன்; என் தாயும், மனைவியும். மிகச் சிறிய குழந்தையும் பசியால் துடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டு எவ்வாறு இருக்க முடியும்? எனவே, வாழ்க்கைப் போராட்டத்தில் உயிர்களைக் காப்பாற்றும் ஒரு பெரிய செயலின் பொருட்டாக, இந்தத் தவறான காரியத்தைச் செய்ய நேரிட்டது!’ என்று கூறினால் வள்ளுவர் என்ன விடை கூறுவார் தெரியுமா? ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை,’ என்ற குறளில், தாயின் பசியையே காண்பவனா யினும் சரி, பெரியோர் பழித்துக் கூறும் செயல்களைச் செய்யாதே’ என்று கட்டளையிடுகிறார்.

எவ்வாறாயினும் காரியத்தைச் சாதித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைகின்ற இற்றை நாள் உலகில், யார்தான் வினைத்துய்மை வேண்டும் என்று நினைக்கப் போகிறார்கள்?

இந்த நாளிலும் அவ்வாறு நினைந்து செயல் புரிகின்ற வர்கள் இல்லாமல் இல்லை. -

தென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரகப் போரை நடத்தி அனுபவம் பெற்ற மகாத்துமா, இந்தியாவிலும் அதனை நடத்த முடிவு செய்தார். கத்தியின்றி இரத்த மின்றித் தொடங்கப் பெற்ற இப்போராட்டம் உலகத் திற்கு ஒரு புதுமையாய் அமைந்தது. ஆயுத பலமுடைய அரசாங்கத்தை ஆன்ம பலம் ஒன்றைத் தவிர, வேறு பெரும்பான்மையோர் பலமுங்கூட இல்லாத ஒரு சிலர் எதிர்த்துப் போராடிய வரலாறு இது.

உலக வரலாற்றிலேயே இத்தகைய ஒரு சிறப்பை இதற்கு முன்னர்க் கண்டதும் இல்லை, கேட்டதும்