பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 0 அ. ச. ஞானசம்பந்தன்

இல்லை. தனிப்பட்ட மனிதர்கள் தம் ஆன்ம சத்தியின் துணை கொண்டு அரசர்களையும், அதிகார வெறியையும் எதிர்த்தது உண்டு. பெரும்பாலும் இப்போராட்டங் களில் தனிப்பட்டவர்களுடைய கொள்கையும், குறிக்கோள் களும் வெற்றி அடையும். ஆனால், அந்த வெற்றி அடைவதற்குள்ளாகப் பெரும்பாலும் அவர்கள் தங்கள் உயிரை விட்டதாகவே வரலாறு கூறக் கேட்கிறோம். அடிகளார் இவ்விரண்டு வகையிலும் ஒரு புதுமையை உண்டாக்கினார். தனிப்பட்டவர்கள் ந - த் து ம். போராட்டமாக இல்லாமல், ஒரு பெரிய நாட்டையே இப் போராட்டத்திற்கு உளப்படுத்தினார். “கத்தி எடுத்து வெற்றி பெறும் கொள்கையை இந்தியா கடைப்பிடிப்ப தானால், ஒருவேளை வினாடி நேர வெற்றியைப் பெறுதலும் கூடும். ஆனாலும், அங்ங்ணம் வெற்றி பெறும் இந்தியா என்னுடைய கனவு நாடாக இருத்தற்கில்லை,’ என்று அடிகள் கூறியுள்ளார்.

1922-ஆம் ஆண்டு, பிப்ரவரித் திங்கள், 1-ஆம் தேதி: அப்பொழுது வைசிராயாய் இருந்த லார்டு ரீடிங்துரைக்கு, ‘பர்தோலியில் தாம் சட்ட மறுப்பு இயக்கம் தொடங்கப் போவதை முன்னறிவிப்புச் செய்துவிட்டு அடிகள் சட்ட மறுப்பு இயக்கத்தைத் தொடங்கினார்.

பர்தோலியிலிருந்து எண்ணுாறு மைல்களுக்கு அப்பால் உள்ள செளரி செளரா’ என்ற நகரத்தில் பிப்பிரவரி 8-ஆம் தேதியன்று அரசாங்க அனுமதியுடன் ஒர் ஊர்வலம் நடைபெற்றது. என்றாலும், ஊர்வலம் நடைபெறும்பொழுது சில ஊர்காவல் அதிகாரிகள் (போலீஸ்) குழப்பம் செய்தனர். உடனே கூட்டம் சேர்ந்தது. கூட்டத்தைக் கலைக்கக் காவலர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். காவலர் தம்மிடமிருந்த குண்டுகள் காலியானவுடன் போலீஸ் தாணாவுக்குள் சென்று. பதுங்கிக் கொண்டனர். அவர்கள் செயலில் ஆத்திரம் கொண்ட மக்கள் கூட்டம், தாணாவுக்கு நெருப்பு வைத்து.