பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. சொல்லேர் ೭9೧ುಗೆ

‘என்ன! உங்கள் குழந்தையா வெளியில் விளை பயாடிக் கொண்டிருப்பது!’ என்று ஒருவர் கேட்கிறார். உள்ளே இருப்பவர் பதறிப் போய் ஆமாம்! ஆமாம்!” என்று இழுத்தாற்போலக் கூறுகிறார். குழந்தை நல்ல சூட்டிகையாக இருக்கிறான்!” என்கிறார் வந்தவர். குழந்தையைப் பெற்றவர் உடனே, அவனுக்கு இரண்டு நாளாக உடல் நலமில்லை,” என்று கூறுகிறார். உடல் நலமில்லை என்று கூறியது அப்பட்டப் பொய்! ஏன் பொய் கூற வேண்டும்? அதுவும் குழந்தைக்கு உடல் நலம் இல்லை என்று ஒரு பொய் கூறவும் வேண்டுமா?

நம்முடைய வீடுகளில் வயது முதிர்ந்த பாட்டிமார் களும், தாய்மார்களும் இன்னுஞ்சில சமயங்களில் தந்தை மார்களுங்கூடச் செய்கின்ற செயல்தான் இது. ஆனால், குழந்தைக்கு உடல் நலமில்லை என்று கூறுகின்றவரும், இதனைப் பொய் என்று தெரிந்தே கூறுகிறார். அதனைக் கேட்டுக் கொள்பவரும் சொல்லப்பட்டது பொய் என்பதை நன்கு அறிவார். இருவரும் பொய் என்று அறிந்த ஒன்றை ஏன் கூற வேண்டும்? அதுதான் இதிலுள்ள சிறப்பு!

‘குழந்தை சூட்டிகை’ என்று கூறினவுடன்

குழந்தைக்குத் தீமை விளைக்கும் முறையில் ஏதோ ஒன்று சொல்லப்பட்டதாகவே பெற்றோர் நினைக்கின்றனர்.