பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 0 அ. ச. ஞானசம்பந்தன்

தில்லை என்ற காரணத்தால் இதனைப் பொய் என்றோ, தவறு என்றோ கூறிவிட முடியாது. காரணகாரிய முறையில் ஆராய்ந்து இதனை விளக்குவது இயலாமல் போயினும் வாழ்க்கையில் இது நடைபெறுவதை அன்றாடம் கண்டு கொண்டுதான் இருக்கின்றோம்.

தாம் விரும்பாமலுங்கூட இத்தகையவர் பிறருக்குக் கேடு செய்து விடுவர். பிறரைப் பார்க்கும் பொழுதும் ‘குழந்தை சூட்டிகை’ என்று கூறும் பொழுதும் இவர் களில் பலர் கேடு விளைவிக்க வேண்டும் என்று நினைப்பதே இல்லை. அவர்களையும் மீறியே அக்கேடு நடைபெற்று விடுகின்றது. தங்களால் இத்தகைய கேடு விளைகின்றது என்பதை அறிந்தால் ஒருவேளை அவர்கள் மனம் மாறினாலும் மாறிவிடுவர். ஏனெனில், கேடு விளைவிக்க வேண்டும் என்பது அவர்கள் கருத்து அன்று.

இவர்களிலும் வேறான ஒரு கூட்டம் உண்டு. இக் கூட்டத்தார் பிறருக்குக் கேடு செய்வதை வேண்டுமென்றே நினைந்து ஆராய்ந்து முயன்று செய்வர். இத்தகைய மன நிலையைக் கம்பநாடன் அழகாகக் குறிக்கின்றான்; கைகேயியைப் பற்றிக் கூறும்பொழுது தன் மனத்தே நினைந்து செய்யும் கொடுமையால் அளந்தாளை’ என்று கூறும் பொழுது பிறருக்குத் தீங்கு செய்யும் இனத்தாரில் இரண்டாவது இனத்தைக் குறிப்பிடுகின்றான். ஆம்! இவர்கள் பிறருக்குத் தீமையை நினைந்து வேண்டுமென்றே செய்பவர்கள்.

இந்த இரண்டாவது இனத்தில் ஒரு சிறப்பான சிறு கூட்டம் உண்டு. இவர்கள் நன்கு கற்று அறிந்தவர்கள். தங்கள் நுண்ணறிவால் பெற்ற கல்வியை, பண்பாடு இன்மையின், தவறான வழிகளுக்கே செலவழிப்பர். கல்வி இவர்களே முயன்று பெற்ற செல்வம். ஆனால், நாக்கில் விஷம் பிறவியிலேயே இவர்கட்குக் கிடைத்துள்ள பேறு. பிறருக்குத் தீமை செய்யக்கூடாது என்ற