பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 0 அ. ச. ஞானசம்பந்தன்

முடியும்? ஒருவேளை தமையனுடைய நற்பண்புகளில் ஈடுபட்டு, அவனே பல்லவ நாட்டை ஆளுவதற்குரிய தகுதி பெற்றவன் என்று நம்பி இவன் இருந்திருப்பினும், உடன் இருந்தவர்கள் சும்மா இருந்திருக்கப் போவதில்லை. பல்லவப் பட்டத்தைப் பெறவேண்டும் என்னும் எண்ணத்தை இளையவன் மனத்தில் விதைத்து விட்டார்கள். எவ்வாறாயினும், கூர்த்த மதியுடையவ னாகிய இளையவன், தன்னுடைய சத்தியின் அளவை நன்கு அறிந்திருந்தான். எனவே, முட்டாள்தனமாகத், தமையன் மேல் படையெடுக்க அவன் துணியவில்லை.

“வினை வலியும் தன்வலியும் மாற்றான் வலியும், துணைவலியும் தூக்கிச் செயல்,’ என்ற குறளை நன்கு அறிந்திருந்தவன் ஆதலின், படை கொண்டு போரிட்டு நந்தியை வெல்ல முடியாது என்ற பேருண்மையை நன்கு அறிந்திருந்தான் இளநந்தி, படைகொண்டு போரிட முடியாது என்பதை அறிந்தவுடன், வேறு வழிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்தால் தூண்டப் பெற்று, வேறு வழிகளை ஆராயத் தொடங்கினான்.

இந்நிலையில் அவனுடன் இருந்த நண்பர் சிலர் எளிமையான வழி ஒன்றை அவனுக்கு எடுத்துக் கூறினர். தெள்ளாற்றெறிந்த நந்தி, கவிதை என்றால் ஊண் உறக்கம் இன்றி, எதனையும் பொருட்படுத்தாமல் அனுபவிக்கும் விருப்பம் உடையவன். அப்படியானால் ஏன் அந்தக் கவிதையின் மூலமே அவனைக் கொல்லக்கூடாது. என்று கேட்டனர். தமிழ்க் கவிதையின் மூலம் ஒருவரைக். கொல்லவும் முடியும் என்பதை அதற்கு முன்னர்க் கேள்விப் படாத இளநந்தி, அதுபற்றித் தீர விசாரித்தான்.

நச்சு எழுத்துக்கள் என்று சொல்லப்படும் சில: எழுத்துக்களைக் கவிதையின் இடையே புகுத்தி, ஒருவர் மேல் சில பாடல்களை இயற்ற வேண்டும். அதன் பின்னர்,