பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறள் கண்ட வாழ்வு O 9


இவர் இருவர் இடையே மூண்ட போரில் சேரமான் கணைக்கால் இரும்பொறை தோற்றுவிட்டான்; போரிட்டு உயிரை விடாமல், சோழனால் சிறை பிடிக்கப்பட்டான். தோல்விக்காக வருந்தவில்லை சேரன்; ஆனால், பகைவனுடைய சிறையில் இருப்பதைப் பெருத்த அவமானமாகக் கருதினான். இந்த நிலையில் தண்ணிர் வேண்டி இருந்தது அவனுக்கு. காவலாளனைப் பார்த்துத் தாகம் தீரத் தண்ணிர் கேட்டான். அவன் உடனே தண்ணிரைக் கொணர்ந்து தாராமல், இவனைக் கொஞ்சம் எள்ளி நகையாடிவிட்டுக் கடைசியில் ஒரு பாத்திரத்தில் தண்ணிர் தந்தனன். ஏற்கெனவே சிறைப்பட்டுக் கிடப்பதை மானம் அழிந்த செயலாகக் கருதி வருந்தும் சேரனுக்கு, காவலாளி செய்த செயல் கட்டோடு பிடிக்கவில்லை. எவ்வளவுதான் தண்ணீர் விடாய் இருப்பினும், மானத்தை இழந்து பகைவன் ஏவலனிடம் கேட்டு வாங்கிய தண்ணிரைக் குடிக்க மனம் வரவில்லை சேரனுக்கு. அவனுடைய கவி உள்ளம் வேலை செய்யத் தொடங்கியது.

"குழந்தையாகப் பிறந்து இறக்காமல், இறந்தே, பிறக்கும் குழந்தையாயினும், குறைப் பிரசவமாகப் பிறப்பினும், போரில் இறவாமல் இவ்வாறு இறத்தல் அவமானம் என்று கருதி, அந்த இறந்த குழந்தையையும், குறையாகப் பிறந்த தசைப் பிண்டத்தையும் வாளால் வெட்டிப் புதைப்பார்கள்.

"சங்கிலியால் கட்டுண்ட நாயைப் போலப் பகைவன் சிறையில் அகப்பட்டு, அப் பகைவனின் காவலாளனைப் பிச்சை கேட்டுத் தண்ணிரைப் பெற்று மானத்தை இழந்து, குடித்து உயிரை வைத்திருக்க விரும்பும் என் போன்றவர்களை இவ்வுலகத்தார் பெறாமல் இருப்பார்களாக!" என்ற பொருளில் ஒரு கவிதையைப் பாடினான்:

குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆள் அன்று என்று வாளில் தப்பார்;