பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள் கண்ட வாழ்வு 0 149

போகின்ற இலாபத்தைக் கருதிச் செய்யப்படுகின்ற உபசரணைகள் அனைத்தும், விருந்து என்ற பெயரில் அடங்கா! முன்னர் வராதவர்களாய், மீட்டும் எக் காலத்தும் நமக்குத் திருப்பித் தராதவர்களாய், வேறு எத்தகைய பிரதி உபகாரத்தையும் நம்மால் எதிர்பார்க்கப் படாதவர்களாய் உள்ளவர்களே விருந்தினர்கள் என்ற சொல்லுக்குப் பொருளாவார்கள்.

இத்தகைய விருந்தினர்களை வரவேற்று உபசரிப்பதில் நம்முடைய நாடு தனிப் பெருமை உடையது. வையத்துள் வாழ்வாங்கு வாழ வழி வகுக்கும் திருக்குறள், ‘விருந்தோம்பல் என்றே ஒர் அதிகாரத்தை பேசுகின்றது. எனவே, சமுதாய வாழ்வு சிறக்க வேண்டுமேயானால், ஒரு தனிப்பட்ட மனிதன் சமுதாயத்தில் சிறந்த உறுப்பாக வேண்டுமேயானால், அவன் விருந்தோம்பலை ஒரு தலையாய கடமையாக மேற்கொள்ள வேண்டும்.

இன்றுங்கூட அடையா நெடுங்கதவும், அஞ்சல் என்ற சொல்லும் உடைய பல பெரியவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இத்தமிழ் நாட்டில் ‘கொடுத்துக் கெட்ட வர்கள் இல்லை,” என்ற பழமொழியே ஏற்பட்டுள்ளது என்றால், விருந்தோம்பவின் பெருமையை யார் அள விட்டுக் கூறமுடியும்? உண்மையைச் சொல்லப் போனால், கொடுத்தமையினாலே, கணக்கில்லாமல் கொடுத்தமை யினாலே, தம் செல்வ நிலை கெட்டு வறுமை அடைந்த குடும்பங்களும் உண்டு. என்றாலும், அந்த வறுமையுற்ற நிலைமையிலுங்கூட அவர்கள் கொடுக்கின்ற மனப் பான்மையை, விருந்து உபசரிக்கின்ற மனப்பான்மையை, மறப்பார்களோ? -

  • எந்தை நல்கூர்ந்தான் இரப்போர்க்கு ஈந்து என்று அவன்

மைந்தர் தம் ஈகை மறுப்பரோ’

அதாவது, எம் தந்தை வந்தவர்கட்கெல்லாம் வேண்டு மளவு கொடுத்தமையால் வறுமை அடைந்து விட்டான்!'