பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 O அ. ச. ஞானசம்பந்தன்

கையைச் சிதைத்துவிடும். அதேபோல, சடையனிடம் வருகின்றவர்களின் தேவை அறிந்து அவன் உபசரிக் கின்றானாம். இரண்டு கல்லை வாங்கும் பொழுது கையை ஒரளவு தளர்த்தியும், நான்கு கற்களை வாங்கும் பொழுது ஒரளவு அதிகப்படியாகத் தளர்த்தியும் வாங்குகின்ற சாமர்த்தியம் போலச் சடையனும் வருபவருடைய தரம் அறிந்து உபசரிக்கின்றான் என்ற கருத்தைப் புலவன் உவமையிலேயே வைத்து உணர்த்திவிடுகின்றான்.

விருந்தோம்பல் என்னும் அதிகாரத்தில் சொல்லப் பட்ட பத்துக் குறள்களுக்கும் இலக்காகச் சடையப்பன் வாழ்ந்தான் என்று கூறுவதில் தவறில்லை. எனினும்,

வித்தும் இடல் வேண்டுங் கொல்லோ ? விருந்து ஓம்பி மிச்சில் மிசைவான் புலம் !”

என்ற குறளுக்குச் சிறப்பாக இவ்வள்ளலின் வாழ்க்கை எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளது. எவ்வாறெனில் ஒருமுறை சடையப்ப வள்ளலின் வீட்டிற்கு வெட்டிக் கொணரப்பட்ட கரும்புகளுள் எல்லாம் ஒவ்வொரு முத்து இருந்ததாம். எனவே, விருந்தோம்புபவன் நிலத்தில் விதை இடாமலும் விளையும் என்ற குறள் உண்மை ஆதலைக் காண்கிறோம்.