பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. எல்லா உயிரும் தொழும்

யாரை எல்லா உயிரும் தொழும்? குறள் ஒரு சில இலக்கணங்களை வகுத்து, இத்தகைய பண்பாடு உடைய வர்களை உலகிலுள்ள எல்லா உயிர்களும் தொழும் என்று பேசுகிறது. இந்த அடியை மட்டும் எடுத்துக் கொண்டு பார்ப்போமானால், அழகான இரண்டு பொருள்கள் கிடைக்கக் காணலாம். யாரோ ஒருவரை, எல்லா உயிரும் தொழும் என்றும் பொருள் கொள்ளலாம். இதன் எதிராக, அந்த ஒருவர் எல்லா உயிரையும் வணங்கு கின்றார் என்ற பொருளும் கூடக் கிடைக்கலாம் அல்லவா? பெரியவர்களின் சிறப்பு என்னவென்றால், அவர்கள் தங்களைப் பெரியவர்கள் என்று அறிந்து கொள்வதே இல்லை. எனவேதான் பிற உயிர்களை எல்லாம் வணங்கத் தயாராக இருக்கின்றார்கள்.

‘பணியுமாம் என்றும் பெருமை,” என்ற குறளுக்கு ஏற்ப வாழ்வை நடத்துகின்றவர்கள் ஆதலின், என்றைக்குமே தங்களை மிகச் சிறியவர்களாகவும், உலகி லுள்ள ஏனையோர் அனைவரையும் மிகப் பெரியவர்களாக -வும் கருதிக்கொள்கின்ற பண்பாடு இவர்களிடம் உண்டு.

கிருஷ்ண சைதன்யர் ஒரு நாள் நடந்து செல்லுகையில் ஒரு மீன்கொத்திப் பறவையைக் கண்டாராம். வேகமாய்ப் பறந்துகொண்டிருந்த அம் மீன்கொத்தி, எவ்வளவு உயரத்தில் எவ்வளவு வேகமாகப் பறந்தாலும், கீழே