பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 O அ. ச. ஞானசம்பந்தன்

தண்ணிரை அடுத்து நீந்துகின்ற மீனின்மேல் கண் வைத்துக் கொண்டே செல்கிறது. ஒரு மீன் கண்ணில் தென்பட்ட வுடன் தன் வேகத்தையும் போக்கையும் நிறுத்தி ஆகாயத் தின் நடுவில் அப்படியே சிறகை அடித்துக் கொண்டு சற்று நேரம் நின்றுவிடுகிறது. இதைக் கண்ட சைதன்யர்

உடனே கீழே விழுந்து அப்பறவையை வணங்கினாராம்.

ஏன் என்று கேட்கப்பட்ட பொழுது, அப்பெரியவர் தந்த விடை நாம் அறிந்துகொள்ள வேண்டுவதொன்று. ‘வேகமாகச் செல்லுகின்ற மீன்கொத்தி எங்கே பறந்தா அலும் தன் கவனம் முழுவதையும் கீழே நீரில் நீந்திச் செல்கின்ற சிறிய மீன்களின் மேலேயே செலுத்துகின்றது. அதே போல எவ்வளவு ஆழமாக இவ்வுலகப் பற்றில் ஈடுபட்டிருந்தாலும் ஆண்டவனிடம் எப்படி மனத்தைப் பதித்து வைக்க வேண்டும் என்பதை எனக்கு இந்தப் பறவை எடுத்துக் காட்டுகின்றது. அந்த அளவு ஒரு சிறந்த பாடத்தைக் கற்றுத் தந்தமையின் மீன்கொத்திக்கும் என் வணக்கம் உரியதாகும்!” என்று கூறினாராம். “எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு,’ என்ற குறளின் கருத்தை ஒரளவு அடியொற்றிச் செய்யப்பட்டதேயாகும் சைதன்யப் பிரபுவின் இச்செயல்.

உலகிலுள்ள மிகத் தாழ்ந்த உயிரிலிருந்து மிக உயர்ந்த மனிதன் வரை எல்லா உயிர்களிடத்திலும் நன்மை தீமை, உயர்வு தாழ்வு ஆகிய இரண்டு பண்புகளும் கலந்தேதான் இருக்கும். எனவே, ஒன்றை நல்லது அல்லது கெட்டது. என்று முடிவு செய்வதற்கு எந்த அடிப்படையைக் கொண்டு முடிவு செய்யலாம் என்ற வினாத் தோன்று மல்லவா? இதற்கு விடை கூற வந்த குறள், குணம் நாடி, குற்றமும் நாடி, அவற்றுள் மிகை நாடி, மிக்க கொளல், என்று கூறியது; அதாவது ஒருவனிடத்திலுள்ள நன்மை தீமை என்ற இரண்டையுமே எடுத்துக் கொண்டு: