பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10 O அ. ச. ஞானசம்பந்தன்


தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீய
கேள் அல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி வயிற்றுத்தித் தணியத்
தாம்இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ இவ் வுலகத்தானே !"

தண்ணிரைக் குடிக்காமல் உயிரையே விட்டுவிட்டான் சேரமான் இரும்பொறை என்ற தமிழன்.

காட்டில் கவரிமான் என்று ஒருவகை மான் உண்டாம். உடல் நிறையச் சடை நாய் போன்று நீண்டு வளர்ந்த, மயிர் இருக்குமாம் அந்த மானுக்கு. இவ்வளவு மயிர் உடல் முழுவதும் இருந்தும், ஒரு மயிர் எங்காவது சிக்கி உதிர்ந்து போனால், அந்த மான் உயிர் வாழாமல் இறந்து விடுமாம். அந்த மானைத்தான் உதாரணம் காட்டுகின்றது குறள், மானத்தோடு வாழும் பெரியோர்க்கு.

மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்"

என்னும் குறள் கண்ட வாழ்வை வாழ்ந்து காட்டியவன். சேரமான் இரும்பொறை.